செய்திகள்

எடப்பாடி தொகுதியில் 85 சதவீதம்; கொளத்தூரில் 60 சத வாக்குப்பதிவு

சென்னை, ஏப். 7– தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு வீதம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விவரங்களை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக பாலக்கோட்டில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகின என […]

செய்திகள்

ஸ்டாலின் – கொளத்தூர் உதயநிதி – சேப்பாக்கம்

173 தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு ஸ்டாலின் – கொளத்தூர் உதயநிதி – சேப்பாக்கம் 129 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. – தி.மு.க. நேரடி போட்டி சென்னை, மார்ச் 12 173 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் வெளியிட்டார். இதில் கொளத்தூரில் 3வது முறையாக ஸ்டாலினும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அவரது மகன் உதயநிதியும் போட்டியிடுகின்றனர். இன்று வெளியான பட்டியலில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பெயர்கள் இடம் […]

செய்திகள்

காங்கிரசை இல்லாமல் செய்யும் தி.மு.க. தான் ‘பி–டீம்’: கமல்ஹாசன்

சென்னை, மார்ச் 6– காங்கிரசை இல்லாமல் செய்யும் தி.மு.க.தான் ‘பி–டீம்’ என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். கொளத்தூரில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:– மக்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யத்துக்குக் கிடைக்கும் பேராதரவால் தூக்கம் கெட்டுப் போனவர்கள் சிலர். தூதுவிட்டவர்கள் பலர். அவர்களுக்கு கமல்ஹாசன் விற்பனைக்கு அல்ல. என் கட்சியும் விற்பனைக்கு அல்ல என்று கூறிவிட்டேன். பாரதீய ஜனதாவின் ‘பி டீம்’ என்று என்னைக் கூறுகிறார்கள். இந்த விஷமப் பிரச்சாரத்தை […]

செய்திகள்

அண்ணா தி.மு.க.வில் விருப்ப மனுக்கள் குவிந்தன

விருப்ப மனு வழங்க நாளை கடைசி நாள் அண்ணா தி.மு.க.வில் விருப்ப மனுக்கள் குவிந்தன அலைமோதிய கூட்டம் சென்னை, மார்ச் 2– சட்டமன்ற பொதுத்தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்குவதற்கு நாளை கடைசி நாள் என்பதால் இன்று தலைமை கழகத்தில் கூட்டம் அலைமோதியது. ஏராளமானவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனு அளித்தார்கள். முன்னாள் எம்.பி. டாக்டர் மைத்ரேயன் இன்று மயிலாப்பூர், வேளச்சேரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்தார். அவருடன் மயிலாப்பூர் தொகுதி […]

செய்திகள்

பழுதுபார்ப்பு எதிரொலி: கொளத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட 8 பகுதிகளுக்கு நாளை குறைவான குடிநீர் சப்ளை

சென்னை, பிப்.5– சென்னை குடிநீர் வாரியம், புழல் 300 மில்லியன் கனஅடி சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள உயர்மின் அழுத்த நீர் உந்து நிலையத்தில் இருந்து மத்திய சென்னை மற்றும் தெற்கு சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்லும் 1200 மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய் பழுதுபார்க்கும் பணி நாளை (6–ந் தேதி) காலை 9 மணி முதல் 7–ந் தேதி காலை 3 மணி வரை நடைபெற உள்ளது. மேற்கூறிய பணி நடைபெறும் நேரத்தில் மத்திய சென்னை மற்றும் […]