சென்னை, அக். 3– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் பிடிக்கச்சென்ற போலீசாரை […]