சென்னை, மார்ச் 10– திரு.வி.க நகர் பகுதியில் நண்பரை கத்தியால் தாக்கிய கொலை முயற்சி வழக்கில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை, பெரம்பூர், கென்னடி சதுக்கம் பகுதியைச் சேர்ந்த பரத் (23) திரு.வி.க நகர் மீன் மார்கெட்டில் மீன் வெட்டும் வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச்சேர்ந்த அவரது நண்பர் கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரத்தை திருவொற்றியூர், பூங்காவிற்கு அழைத்து சென்று ஒருவரை தாக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். […]