செய்திகள்

டெல்டா வகை கொரோனாவால் 3 வது அலை: பிரிட்டன் எச்சரிக்கை

லண்டன், ஜூன் 21– டெல்டா வகை கொரோனாவால் பிரிட்டனில் 3 வது அலை ஏற்படும் என்பதால், அனைவரும் 2 வது தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா இரண்டாம் அலையால் பிரிட்டன், பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக இந்தியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் இந்த மூன்று நாடுகளிலும் உருமாறிய கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரிட்டனில் உடனுக்குடனான ஊரடங்கு கட்டுப்பாடுகளாலும், தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தியதாலும் இரண்டாவது அலையைப் பெரியளவில் கட்டுப்படுத்தி சாதித்தது. […]

செய்திகள்

இந்தியாவை இங்கிலாந்திடம் இருந்து பாடம் கற்க எய்ம்ஸ் இயக்குனர் அறிவுரை

புதுடெல்லி, ஜூன் 21– ‘டெல்டா பிளஸ்’ கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இங்கிலாந்திடம் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் போது டெல்டா வகை வைரஸ் வேகமாக பரவி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்த நாடு மாதக்கணக்கில் […]

செய்திகள்

ஹஜ் புனித பயணம்: வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை

ரியாத், ஜூன்.13- ஹஜ் புனித பயணத்துக்கு இந்த ஆண்டு சவுதி அரேபியாவை சேர்ந்த 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. முஸ்லிம்களின் புனித தலமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஹஜ் புனித பயணத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித பயணம் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த புனித பயணத்துக்கான […]

செய்திகள்

கொரோனா 2வது அலை: இந்தியா முழுவதும் 719 மருத்துவர்கள் உயிரிழப்பு

அதிகபட்சமாக பீகாரில் 111 பேர் மரணம் புதுடெல்லி, ஜூன் 12– உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் 2வது அலைக்கு இந்தியா முழுவதும் 719 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அதிகபட்சமாக பீகாரில் 111 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 17.60 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1 கோடியே 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் தொடர்ந்து 5வது நாளாக, தினசரி […]

செய்திகள்

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா

பீஜிங், ஜூன் 12– சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவத் தொடங்கி உள்ளது. சீனாவில் கடந்த 2019–ம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா பரவல் காரணமாக திணறி வரும்வேளையில் சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று […]

செய்திகள்

கோவேக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு

நியூயார்க், ஜூன் 11– கொரோனா அவசரகால தேவைக்காக கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி மறுத்துள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் அவசரகால தேவைக்கு அனுமதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றது. இதனிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் அமெரிக்க ஒப்பந்ததாரரான ஒகுஜென் நிறுவனம் சார்பில் கோவேக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் அவசரகால தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரியிருந்தது. இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசியை […]

செய்திகள்

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண்

சென்னை, ஜூன் 11– ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் கொரோனா நோயின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா வார்டு இயங்கும் கட்டிடத்தின் 8-வது தளத்தில் அழுகிய நிலையில் பெண் உடல் கிடந்தது. அந்த பெண்ணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பிணமாக கிடந்த பெண், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3வது தளத்தில் கொரோனா […]

செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர் குடும்பத்துக்கு உடனடி ஓய்வூதியம்

மத்திய ஓய்வூதியதாரர்கள் நலத்துறை உத்தரவு புதுடெல்லி, ஜூன்.9-– கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு உடனடியாக குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்தியப் பணியாளர் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியதாவது: பணியில் இருக்கும் அரசு ஊழியர் இறந்தால், இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டு, குடும்ப ஓய்வூதியம் கோரும்போது, ஒரு மாதத்திற்குள் குடும்ப ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்வதை தனிப்பட்ட முறையில் […]

செய்திகள்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்வு

சென்னை, ஜூன் 8– சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.37,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா காரணமாக தொழில்துறை கடுமையான சரிவைச் சந்தித்தது. இதனால் பலரும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கம் திரும்பினார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. இதனால் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தது. இந்நிலையில் அண்மையில் தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறியும், இறங்கியும் வருகிறது. […]

செய்திகள்

கொரோனா 2வது அலை: இந்தியாவில் 646 மருத்துவர்கள் உயிரிழப்பு

புதுடெல்லி, ஜூன் 6- கொரோனா 2வது அலையில் கடந்த 4 மாதங்களில் இந்தியா முழுவதும் 646 டாக்டர்கள் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா 2வது அலையின் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த ஆண்டு பரவிய முதல் அலையை ஒப்பிடுகையில், இரண்டாம் அலை வீரியமிக்கதாக உள்ளது. இதில் அதிகபட்சமாக, கடந்த மாத துவக்கத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பும் அதிக அளவில் இருந்தது. தற்போது […]