செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 45 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

புதுடெல்லி, ஆக. 29– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 083 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே […]

செய்திகள்

கொரோனா: அடுத்தாண்டு இறுதிக்குள் நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பலாம்

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தகவல் சென்னை, ஆக. 25– கொரோனாவில் இருந்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பிருக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2-வது அலை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், விரை வில் 3-வது அலை பரவ இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:– […]

செய்திகள்

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? அமைச்சர்கள் விளக்கம்

சென்னை, ஜூலை 13– தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறப்பது என்பது பற்றி முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகஷே் பொய்யாமொழி ஆகியோர் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்–லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. கொரோனா குறைந்ததையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் […]

செய்திகள்

இந்தியாவில் 40 ஆயிரத்திற்கு கீழ் வந்தது கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஜூலை 5– இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கு கீழ் வந்தது. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா 2-வது அலை இப்போது வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 46 ஆயிரத்து 617 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று முன் தினம் அது மேலும் சரிந்து 44 ஆயிரத்து 111 ஆக பதிவாகியிருந்தது. நேற்று 43ஆயிரத்து 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று தொற்று பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. […]

செய்திகள்

இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 27 சதவீதம் உயர்வு

நியூயார்க், ஜூன்.22- இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 27 சதவீதம் உயர்ந்துள்ளது. உலகளாவிய முதலீட்டு அறிக்கையை ஐ.நா. அமைப்பு நேற்று வெளியிட்டது. அதில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக உலக அளவில் அன்னிய நேரடி முதலீடு 35 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு 1½ லட்சம் கோடி டாலராக இருந்த உலகளாவிய அன்னிய நேரடி முதலீடு 1 லட்சம் கோடி டாலராக குறைந்துள்ளது. அதே சமயத்தில், இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 27 சதவீதம் […]

செய்திகள்

வேலையை இழந்தோரும் பி.எப். கணக்கிலிருந்து முன் பணம் எடுக்க அனுமதி

புதுடெல்லி, ஜூன் 22– பி.எப். எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள பணத்தை வேலையை இழந்தோரும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையின்போது பிரதமரின் கரீப் கல்யாண் யோஜ்னா திட்டத்தின் ஒரு பகுதியாக வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் எடுக்கும் சிறப்புத் திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. கொரோனா 2-வது அலையில் தொழிலாளர்களின் நலன் கருதி அதே சிறப்புத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படுகிறது. இதன்படி தொழிலாளர் வருங்கால […]

செய்திகள்

இந்தியாவை இங்கிலாந்திடம் இருந்து பாடம் கற்க எய்ம்ஸ் இயக்குனர் அறிவுரை

புதுடெல்லி, ஜூன் 21– ‘டெல்டா பிளஸ்’ கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இங்கிலாந்திடம் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் போது டெல்டா வகை வைரஸ் வேகமாக பரவி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்த நாடு மாதக்கணக்கில் […]

செய்திகள்

‘நீட்’, ‘ஜே.இ.இ.’ தேர்வு குறித்து விரைவில் முடிவு

புதுடெல்லி, ஜூன்.19- தள்ளி வைக்கப்பட்டு உள்ள ‘நீட்’, ‘ஜே.இ.இ.’ தேர்வுகளை நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் பொறியியல் நுழைவுத்தேர்வான ஜே.இ.இ. 4 முறை நடத்தப்படுகிறது. இதில் முதல் 2 தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருந்த அடுத்த 2 தேர்வுகள் நடத்தவில்லை. இதைப்போல இந்த ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வும் நடத்தப்படவில்லை. […]

செய்திகள்

கடன் தவணை செலுத்த சலுகை வழங்க முடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி, ஜூன் 12– கொரோனா 2-வது அலையை காரணம் காட்டி வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கு அவகாசம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வாடிக்கையாளர் வங்கியில் வாங்கிய கடன் தவணையை செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. அதேபோல தற்போது கொரோனாவின் 2-வது அலை காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் மறுப்பு இந்நிலையில், விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், […]

செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் ‘இ–பதிவு’ முறை அமுலுக்கு வந்தது

சென்னை, மே.17- தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிப்பதற்கு ‘இ–பதிவு’ முறை இன்று முதல் அமுலுக்கு வந்தது. தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 10ந்தேதி முதல் 24ந்தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு ‘இ–பதிவு’ முறை (http://eregister.tnega.org) அமல்படுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 13-ந்தேதி நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் […]