நாடும் நடப்பும்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்? இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப், ஜோ பிடன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3 அன்று நடைபெற இருக்கிறது. ஆம்., தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் நான்கு ஆண்டுகளாக வகித்த உலகின் மிக சக்தி வாய்ந்த அப்பதவியை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தக்க வைத்துக் கொள்வாரா? டிரம்பின் மீண்டும் வெற்றிக்கு தடையாக இருப்பது மிக கண்ணியமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் ஜோ பிடன் தான்! ஒபாமா ஜனாதிபதியாக இருந்த எட்டு வருடமும் ஜோ பிடன் தான் துணை ஜனாதிபதியாக பதவியில் இருந்தார். ஆரம்பத்தில் ஜோ பிடன் பெயர் […]

செய்திகள்

நெருங்கும் பண்டிகைகள்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

வாஷிங்டன், அக்.20– கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் பண்டிகை காலத்தில் அதிகரிக்க வாய்பிருப்பதால், மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி எடுத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு குறைந்து வருவதாக தெரிகிறது. சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் நாளொன்றுக்கு 70 ஆயிரம் வரை பாதிப்பு இருந்த வந்தது. ஆனால் தற்போது 50 ஆயிரத்துக்கும் குறைவாகவே கொரோனா பரவல் இருக்கிறது. இந்தியாவை போலவே, வங்க […]

செய்திகள்

கொரோனா வைரஸ்: வாழ்க்கையை புரட்டிப்போடும் நீண்டகால பாதிப்புகள்

நியூயார்க், அக். 17- கொரோனா வைரஸின் நீண்டகால பாதிப்புகள் ஒருவரை நான்கு வேறுபட்ட வகைகளில் பாதிக்கக் கூடும் என்று மதிப்பாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட பிறகு தனக்கு நீண்டகால வைரஸ் பாதிப்புகள் இருப்பதை நம்ப முடியாதவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், அதற்கேற்ற சிகிச்சையை சுகாதார பணியாளர்கள் வழங்கும் வகையிலும் இது அமைந்துள்ளது. மேலும், கொரோனாவின் நீண்டகால பாதிப்புகளுடன் வாழ்பவர்கள் மிகப் பெரிய உளவியல் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பிரிட்டனின் தேசிய […]

நாடும் நடப்பும்

வேதியியலில் சாதிக்கும் பெண் விஞ்ஞானிகள்

சென்ற வாரம் அறிவிக்கப்பட்ட நோபல் பரிசுகளில் வேதியியல் அதாவது கெமிஸ்ட்ரிக்கு இரு பெண் விஞ்ஞானிகள் பெயர் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு மகளீர் ஆய்வு திறமைக்கான அங்கீகாரம்! அது மட்டுமின்றி வரலாற்றுப் பக்கங்களையப் புரட்டி பார்க்கவும் வைக்கிறது. வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு 2 பெண் விஞ்ஞானிகள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பெண் விஞ்ஞானிகள் மட்டுமே இந்தத் துறையில் நோபல் பரிசை வென்றுள்ளனர். இந்தாண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இமானுல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ.டவுனா ஆகிய […]

நாடும் நடப்பும்

‘ஹெபடைட்டிஸ்’ தடுப்பு ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு

நடப்பு ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ‘ஹெபடைட்டிஸ் சி’ கிருமியை கண்டுபிடித்து பல்வேறு ஆராய்ச்சிகளில் வெற்றி கண்ட 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கிருமிகள் என்பது உலகமே பாதிப்படையும் தன்மையை கொண்டது என்ற விழிப்புணர்வு 19–ம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே புரிந்துகொண்ட ஒன்றுதான் என்றாலும் சமீபத்திய கொரோனா வைரஸ் பெரும் தொற்று ஏற்படுத்தி வரும் சர்வ நாசத்தை பார்க்கும் போது கிருமியின் சக்தியைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏழை, பணக்காரர், எளியோர், வலியோர், சாமானியன், சக்திவாய்ந்த பொறுப்பில் […]

செய்திகள்

கொரோனா வைரஸ் 6 அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும்

கொரோனா வைரஸ் 6 அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும் மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்க விஞ்ஞானிகள் நியூயார்க், அக். 7- கொரோனா வைரஸ் கிருமிகள், ஆறு அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை (சிடிசி) கூறியுள்ளதாவது:- காற்றில் பரவும் கொரோனா வைரஸ் கிருமிகள், சில மணி நேரம் உயிர்ப்புடன் இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் கூறுவதை உறுதிப்படுத்தியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு […]

வாழ்வியல்

கொரோனா வைரஸ் நுரையீரலை என்ன செய்கிறது? ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டுப்பிடிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ள நோயாளிகளின் நுரையீரல் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும் திசுக்களுக்கு ஏற்படும் சேதம் பற்றியும் ஜெர்மன் விஞ்ஞானிகள் உயர் தொழில்நுட்ப இமேஜிங் மூலம் கண்டுப்பிடித்துள்ளனர். நுரையீரலின் ரத்தக் குழாய்கள் மற்றும் நுண் காற்றுப்பைகளில் கொரோனா ஏற்படுத்தும் மாற்றங்களை உயர் தொழில்நுட்ப இமேஜிங் மூலம் படம்பிடித்துள்ளதால் கொரோனா சிகிச்சையில் இது பெரிய உதவிபுரியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இலைப் (eLife) என்ற இதழில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. இது ஒரு புதிய எக்ஸ்-ரே உத்தியாகும். […]

வர்த்தகம்

நுரையீரலை கொரோனா முழுமையாக பாதித்தது: வெண்டிலேட்டர் இல்லாமல் 54 வயது பெண்ணைக் காப்பாற்றிய சென்னை நோபல் மருத்துவமனை

சென்னை, செப்.27 நுரையீரலில் 100 சதவிகிதம் கொரோனா வைரஸ் பாதித்த பெண் நோயாளிக்கு வெண்டிலேட்டரைப் பயன்படுத்தாமல் புரசைவாக்கம் நோபல் மருத்துவமனை சிகிச்சையளித்து, வெற்றிகரமாக குணப்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம், நெல்லூரைச் சேர்ந்த 54 வயதான ஹேமாவதி, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனது உடல்நிலை 99% ஒத்துழைக்கக்கூடிய நிலையில் இல்லை. உயிர் பிழைக்கும் வாய்ப்பும் பெரிதாக இல்லை என்று தெரிந்த போதிலும் அவர் தனது நம்பிக்கையை இழக்கவில்லை. நோபல் மருத்துவமனையில் அவர் தானாக வந்து சேர்ந்து, அதிதீவிர நிலையில் சிகிச்சைப் […]

வாழ்வியல்

கண் கண்ணாடி அணிந்தவர்களை கொரோனா வைரஸ் பாதிக்க வில்லை : விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு

கண் கண்ணாடி அணிந்தவர்கள் குறைவான அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுகிறார்கள் என்று விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். கண்ணாடி அணிவோருக்கு கொரோனா வைரஸ் பரவுமா ?பரவாதா? என்ற ஆய்வில் மகிழ்ச்சி தகவல் வெளிவந்தது. சீனாவில் உஹான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண் கண்ணாடி அணிந்தவர்கள் குறைவான அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சமீபத்திய ஆய்வில் “கண் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கும் அபாயம் ஐந்து மடங்கு குறைவாக உள்ளது” என தெரியவந்துள்ளது. சீனாவின் […]