செய்திகள்

இந்தியாவில் சற்று குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி,மே 3- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 147- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை தாக்கம் தொடர்ந்து அதிகரித்து, புதிய உச்சம் தொட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு நடைமுறையிலுள்ளன. இந்த நிலையில்,  சற்று ஆறுதல் தரும் வகையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. நேற்று முன் […]

செய்திகள்

கொரோனா நோயாளிகள், குடும்பத்தினர் வெளியே சுற்றினால் ரூ.2 ஆயிரம் அபராதம்

சென்னை, மே.2- சென்னையில் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெளியே சுற்றினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை பல்லவன் சாலையில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கான முதற்கட்ட உடற்பரிசோதனை மையத்தினை சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலரும், வணிக வரித்துறை முதன்மை செயலாளருமான எம்.ஏ.சித்திக் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் நேற்று […]

செய்திகள்

வீட்டிலும் மாஸ்க் அணியுங்கள்: மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி, ஏப். 27– இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் வீடுகளிலும் மாஸ்க் அணிந்து கொள்ளவும், விருந்தினரை வீட்டுக்கு அழைக்காமல் இருக்கவும் நிதி ஆயோக் அறிவுறுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஒரு நாள் பாதிப்பு, 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் முழு நேர, பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுவெளியில் மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாஸ்க் அணியாவிட்டால் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், […]

செய்திகள்

இந்தியாவில் 1.50 லட்சத்தை தாண்டியது ஒரு நாள் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஏப். 11- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 52 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தொடர் அதிகரிப்பை கண்டு வரும் இந்தியா, உலகின் அதிக கொரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 52 ஆய்ரத்து 879 […]

செய்திகள்

சென்னையில் ‘மாஸ்க்’ அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம்

சென்னை, ஏப்.9– சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும், எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பிறப்பித்துள்ள வழிமுறைகளை மீறுபவர்களிடமிருந்து பின்வரும் வகையில் அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மாஸ்க் முழுமையாக அணியாவிட்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும். அதேபோல, பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா குவாரன்டைன் […]

செய்திகள்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா

சென்னை, ஏப்.8– திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தேர்தல் பிரச்சாரத்தின் பொது வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகனுக்கு, கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா பரிசோதனையில், […]

செய்திகள்

இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை

புதுடெல்லி, ஏப்.8– கொரோனா தொற்று அதிகரிப்பின் எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கடந்த 5–ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. அதனை தொடர்ந்து நேற்று 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் […]

செய்திகள்

கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா: 1.27 லட்சத்தை நெருங்கிய ஒரு நாள் பாதிப்பு

புதுடெல்லி, ஏப். 8– இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிதாக 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த மாதம் 5–ம் தேதி இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

செய்திகள்

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதான ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா

மும்பை, ஏப். 3– மும்பை வான்கடே கிரிக்கெட் மைதான ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 9–ம் தேதி துவங்க இருக்கிறது. மும்பை, டெல்லி, சென்னை, அகமதாபாத்,கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்களுக்கு போட்டியை நேரில் காண அனுமதி கிடையாது. ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 19 பேருக்கு கடந்த வாரம் கொரோனா […]

செய்திகள்

ஊழியர்களுக்கு கொரோனா: கோவையில் வங்கி மூடல்

கோவை, மார்ச் 24– கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த வங்கி கிளை தற்காலிகமாக மூடப்பட்டது. தமிழத்தில் வைரஸ் பாதிப்பின் 2-வது அலை தொடங்கிவிட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1437 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 532 பேரும், கோவையில் 146 பேரும் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல […]