செய்திகள்

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனிவா, ஏப்.13– கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என தோன்றுவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் கெப்ரிசிஸ் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று 2வது அலை வீசி வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக தலைவர்கள் கடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் தகுதி […]

செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக்–வி தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி

டெல்லி, ஏப். 13– அவசரகால தேவைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக்– வி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில், அண்மை நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 3 வது தடுப்பூசி இதுவரை இந்தியாவில், […]

செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தும் ‘ரெம்டெசிவிர்’ மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

புதுடெல்லி, ஏப்.12- இந்தியாவில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தும் ‘ரெம்டெசிவிர்’ மருந்தின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு பல்வேறு விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் ‘ரெம்டெசிவிர்’ எனப்படும் வைரஸ் தடுப்பு (ஆன்டிவைரல்) ஊசியும் போடப்படுகிறது. நாடு முழுவதும் தற்போது லட்சக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருவதால் இந்த ஊசியின் தேவை அதிகரித்து வருகிறது. இது வருகிற நாட்களில் இன்னும் அதிகரித்து மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் வரும் நிலை […]

செய்திகள்

தடுப்பூசி திருவிழா முதல்நாள்: 27 லட்சம் பேருக்கு தடுப்பூசி

டெல்லி, ஏப். 12– இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான நேற்று, 27 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தடுப்பூசி. தடுப்பூசி போடுவதை மக்களிடையே ஊக்குவிக்கும் வகையில், ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 14 வரை இந்தியா முழுவதும் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் […]

செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை: சுகாதாரத்துறை தகவல்

சென்னை, ஏப்.12– தமிழகத்தில் தடுப்பூசிக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும், 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவோர் எண்ணிக்கையும் கூடியுள்ளது. தமிழகத்தில் இதுவரை, 38 லட்சம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா பரவல் அதிகரிப்பதால், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்; அதற்கான வயது வரம்பை குறைக்க வேண்டும் என, பல மாநில முதல்வர்கள் […]

செய்திகள்

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 63,000 பேருக்கு தொற்று

மகாராஷ்டிராவில் நேற்று புதிய உச்சமாக 63 ஆயிரத்து 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 349 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாக தகவல் வேளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த வார இறுதிநாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாநிலத்தில் 63 ஆயிரத்து 294 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 7 ஆயிரத்து 245 ஆக உயர்ந்து உள்ளது. […]

செய்திகள்

அக்டோபர் மாதத்திற்குள் 5 புதிய தடுப்பூசிகள்

புதுடில்லி, ஏப்.12– இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் 5 புதிய தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவாக்சின்’ என்னும் 2 தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக ரஷ்யாவின், ‘ஸ்புட்னிக் – வி, ஜான்சன் அண்ட் ஜான்சன், நோவாவாக்ஸ், சைடஸ் கடிலா, பாரத் பயோடெக்கின் இன்ட்ராநேசல்’ ஆகிய 5 தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி […]

செய்திகள்

இயக்குநர் சுந்தர்.சி–க்கு கொரோனா தொற்று

சென்னை, ஏப். 11– தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குநர் சுந்தர்.சி-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குநர் சுந்தர்.சி-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுந்தர் சி–யின் மனைவி நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் இத்தகவலை உறுதி செய்யுள்ளார். மேலும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுந்தர்.சி சிகிச்சை பெற்று வருவதாகவும், […]

செய்திகள்

இந்தியாவில் 1.50 லட்சத்தை தாண்டியது ஒரு நாள் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஏப். 11- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 52 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தொடர் அதிகரிப்பை கண்டு வரும் இந்தியா, உலகின் அதிக கொரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 52 ஆய்ரத்து 879 […]

செய்திகள்

கொரோனா புதிய உச்சம்: இந்தியாவில் 1.45 லட்சத்தை கடந்த ஒரு நாள் பாதிப்பு

புதுடெல்லி, ஏப்.10– இந்தியாவில் புதிதாக 1 லட்சத்து 45 ஆயிரத்து 384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துவிட்டது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி […]