செய்திகள்

கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

பெங்களூரு, ஜூலை 2– அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து கர்நாடகா வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தற்போதும் அதிகமாக உள்ளது. இந்த மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கர்நாடகாவில் தொற்று பாதிப்பு கணிசமாகக் குறைவாக உள்ளது. மாநிலத்தில் நேற்று சுமார் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா […]

செய்திகள்

ஸ்மார்ட்போன் திரை வழியாக கொரோனா பரிசோதனை

லண்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு லண்டன், ஜூன் 26– ஸ்மார்ட்போன் திரையில் இருந்து எடுக்கப்படக் கூடிய மாதிரிகளை பயன்படுத்தி, குறைந்த விலையில் துல்லியமாக செய்யக்கூடிய புதிய கொரோனா வைரஸ் பரிசோதனை முறையை லண்டன் ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கியுள்ளது. லண்டனைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கியுள்ள இந்த முறையில், ஸ்மார்ட்போன் திரையில் நேரடியாக ஸ்வேப் பரிசோதனையை மேற்கொள்ளலாம். வழக்கமான, பி.சி.ஆர் நாசி ஸ்வேப் சோதனையில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்கள், இந்த சோதனையின் போதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுவதாக […]

செய்திகள்

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை

சென்னை மாநகராட்சி ஏற்பாடு சென்னை, ஜூன் 26– கொரோனா பரவலை கண்டுபிடிக்கும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்கெட் பகுதிகளில் சுழற்சி முறையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிகையில் கூறப்பட்டுள்ளதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோவிட் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR) […]

செய்திகள்

ஜீன் 21–ந்தேதி கூடுகிறது தமிழக சட்டசபை

சென்னை, ஜூன்.10- தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் துவங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் முடிவை தொடர்ந்து தி.மு.க. அரசு பதவி ஏற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். பின்னர் சட்டசபையின் சபாநாயகராக தி.மு.க.வை சேர்ந்த மு.அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், 16வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர், கவர்னர் உரையுடன் 21ந்தேதியன்று தொடங்குவதாக சபாநாயகர் […]

செய்திகள்

உப்பு நீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை

நாக்பூர், மே 29– வாய்க் கொப்பளித்து 3 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் புதிய முறையை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் மிக எளிமையானதும், புதுமையானதுமான கொரோனா பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) நாக்பூர் – தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மைய (NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் […]

நாடும் நடப்பும்

சுய கொரோனா பரிசோதனை கருவி: 15 நிமிடத்தில் முடிவு

நாடும் நடப்பும் ஆர்.முத்துக்குமார் காய்ச்சல் இருக்கிறதா? என தெரிந்து கொள்ள தெர்மா மீட்டர் கருவி இருக்கிறது. நம் ரத்தத்தில் சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள ரத்த பரிசோதனைக் கருவி இருக்கிறது. கர்ப்பமாகி விட்டதா? என்பதை தெரிந்து கொள்ளவும் சுய பரிசோதனை முறை இருக்கிறது அல்லவா? அந்த வரிசையில் சில நாட்களில் கொரோனா தொற்று உள்ளதா? என்பதை நமக்கு நாமே பரிசோதித்து தெரிந்து கொள்ள கருவி வர இருக்கிறது. இந்தக் கருவியை கொண்டு 15 நிமிடங்களில் பரிசோதனை முடிவையும் […]

செய்திகள்

தொற்று இல்லாத 4 ஆயிரம் பேருக்கு தொற்று என அறிவித்த தனியார் சோதனை மையத்திற்கு அனுமதி ரத்து

சென்னை, மே 22– கொரோனா தொற்று இல்லாத 4 ஆயிரம் பேரின் முடிவுகளை தொற்று உடையவர்கள் என மாற்றி அறிவித்த தனியார் சோதனை மையத்தின் அனுமதியை பொது சுகாதாரத்துறை ரத்து செய்துள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் பரிசோதனை மையத்தில் கடந்த 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கொரோனா தொற்று இல்லாத 4 ஆயிரம் பேரின் முடிவுகளை தொற்று உடையவர்கள் என மாற்றி […]

செய்திகள்

கொரோனா பரிசோதனைக் கட்டணம் குறைப்பு: தமிழக அரசு அதிரடி

சென்னை, மே 20– தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இதுதொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ளார். அதில் தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கு ரூ. 1,200–லிருந்து ரூ. 900 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதுவே முதல்வர் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ. 800லிருந்து ரூ. 550 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், குழுவாக சென்று கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு ரூ. 600லிருந்து ரூ. 400 ஆக குறைக்கப்படுகிறது. வீட்டிற்குச் சென்று […]

செய்திகள்

கொரோனாவை வீட்டிலேயே கண்டறிந்திடும் புதிய கருவிக்கு ஐசிஎம்ஆர் அனுமதி

மும்பை, மே 20– கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதை வீட்டிலேயே உறுதி செய்யும் வகையில், ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவியின் பயன்பாட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதை விரைந்து கண்டறியும் ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் என்ற கருவியை, மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஒரு பரிசோதனை கருவியின் விலை ரூ.250 ஆகும். 15 நிமிடங்களுக்குள் பரிசோசனை முடிவுகளை தெரிந்துகொள்ள […]

செய்திகள்

மகாராஷ்டிரா வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!

மும்பை, ஏப்.19– கேரளா, கோவா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய 6 மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வருபவர்கள் கண்டிப்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 6 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா தலைமைச் செயலாளர் […]