செய்திகள்

2ம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட 16 வார இடைவெளி: மத்திய அரசக்கு நிபுணர் குழு பரிந்துரை

புதுடெல்லி, மே. 13– கொரோனாவைத் தடுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் இப்போது நடைமுறையில் உள்ள 4-லிருந்து 8 வார இடைவெளியை 12-லிருந்து 16 வாரமாக மாற்ற நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் மட்டுமே மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் உள்ளிட்ட மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்ட் மருந்துகளும் 18- வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் செலுத்தப்பட்டு வருகிறது. […]

செய்திகள்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

சென்னை, மே 9– தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் 24-ந்தேதி வரையிலான 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி இல்லை. முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்பதால், முன் கூட்டியே மதுபானங்களை வாங்க மது பிரியர்கள் நேற்று டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். டாஸ்மாக் கடைகள் நேற்று […]

செய்திகள்

தமிழகத்துக்கு ஆக்சிஜன் அளவு 419 மெட்ரிக் டன்னாக அதிகரிப்பு

டெல்லி, மே 9– தமிழகத்திற்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை 220 மெட்ரிக் டன்னில் இருந்து, 199 டன் உயர்த்தி, 419 மெட்ரிக் டன்னாக மத்திய அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். அந்த வகையில் தமிழகத்திற்கு மத்திய அரசால் வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வேண்டும் […]

செய்திகள்

இன்றும், நாளையும் 24 மணி நேர பேருந்து சேவை

சென்னை, மே 8– தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமுலுக்கு வருவதால், தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்து சேவைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா 2வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் மே 10ந்தேதி காலை 4 மணி முதல் 24ந்தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று முன்னிட்டு பொது மக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான […]

செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு!

கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் தமிழக அரசு கடந்த சில வாரங்களாக பல கட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது. இந்த ஊரடங்குகள் மூலம் பெரிய அளவில் தொற்று குறையாததால் புதிதாக பொருப்பேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு 10.05.2021 முதல் அடுத்த 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த முழு […]

செய்திகள்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று

சென்னை, மே 7– முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள விஜயபாஸ்கர், தனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தற்போது தனிமைப்படுத்தி கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா தொற்று செய்துக் கொள்ளும்படியும், அனைவரும் அரசின் கொரோனா வழிகாட்டு […]

செய்திகள்

நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவுக்கு பலி : எடப்பாடி, ஓபிஎஸ் இரங்கல்

சென்னை, மே 6– பிரபல நகைச்சுவை- நடிகர் பாண்டு இன்று (வியாழன்) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 74. பாண்டுவும், அவரது மனைவி குமுதாவும் கொரோனாவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டு உயிர் இழந்தார். அவரது மனைவி, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். பாண்டு- – குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு, பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி […]

செய்திகள்

சொந்த நாட்டுக்கு திரும்பும் ஐ.பி.எல் வெளிநாட்டு வீரர்கள்

புதுடெல்லி, மே 6– ஐபிஎல் போட்டியில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். 14வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரமல் மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 29 போட்டிகள் நிறைவடைந்து 30–வது போட்டி நடக்க இருந்த நிலையில் ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையத்துக்குள்ளாக இருந்த வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐ.பி.எல். போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய பயணிகளுக்கு பல்வேறு […]

செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் இறக்குமதி

சென்னை, மே.6- வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் நேரடியாக தனியார் அமைப்புகள் சார்பில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த கருவிகளை விமான நிலையத்தில் இருந்து உடனடியாக ‘டெலிவரி’ செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. 2-வது அலையால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பெரும் சவாலாக இருப்பது ஆக்சிஜன் தட்டுப்பாடுதான். எனவே ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை […]

செய்திகள்

ஐபிஎல் போட்டிகள் தற்காலிக ஒத்திவைப்பு

புதுடெல்லி, மே 4– ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் 14வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 9–ந் தேதி சென்னையில் தொடங்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் நடத்தப்பட்டு வருகின்றன. மே 30–ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. தற்போது 29 போட்டிகள் முடிந்து நேற்று 30 போட்டியாக கொல்கத்தா – பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டி நடக்க இருந்தது. […]