செய்திகள்

நாடு முழுவதும் செப்டம்பர் 12ந்தேதி ‘நீட்’ தேர்வு

இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம் புதுடெல்லி, ஜூலை.13- நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு செப்டம்பர் 12ந்தேதி நடைபெறும் என்றும், இதற்கு இன்று (13–ந்தேதி) மாலை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ என்ற நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டிலும் ‘நீட்’ தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் தேர்வு மையங்களை அதிகரித்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை […]

செய்திகள்

தனியார் பள்ளிகள் 2 கட்டங்களாக கட்டணம் வசூலிக்க பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை, ஜூலை.8- தனியார் பள்ளிகள் 2 கட்டங்களாக 75% கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பல பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்த வலியுறுத்துவதாக பல்வேறு புகார்கள் கல்வித்துறைக்கு வந்தவண்ணம் இருக்கின்றன. இதையடுத்து தனியார் பள்ளிகள் 75 சதவீத கல்விக் கட்டணத்தை வசூலிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு […]

செய்திகள் வர்த்தகம்

குழந்தைகளுக்கு மிட்டாய் வடிவில் கொரோனா தடுப்பூசி மருந்து

இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் கே.எம். செரியன் குழு பரிந்துரை சென்னை, ஜூன். 13– கொரோனா வைரஸ் மூன்றாவது அலை விரைவில் வரக்கூடும் என்றும் இது சிறுவர்களை பெருமளவில் தாக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதிலிருந்து குழந்தைகளை காக்கும் வகையில் பிராண்டியர் லைப் மருத்துவமனை தலைவர் மருத்துவர். கே.எம். செரியன் மற்றும் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர்கள், ஐ.ஐ.டி. நிபுணர்கள் ஆகியோர் இணைந்து புதியதாக ”கொரோனா கார்ட்” என்னும் இயற்கை சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக போராடும் ”கொரோனா […]

செய்திகள்

பிளஸ்–1 மாணவர் சேர்க்கை: 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிரிவுகள் ஒதுக்கீடு

பள்ளி அளவில் நடக்க இருந்த நுழைவுத்தேர்வு ரத்து சென்னை, ஜூன்.10- தமிழகத்தில், பிளஸ்–1 மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிபெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது. அதேபோல், மாணவர்கள் நலன் கருதி 9ம் வகுப்பு இறுதித்தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், […]

செய்திகள்

தடுப்பூசி போடுவதில் யாருக்கு முன்னுரிமை? புதிய அரசாணை வௌியீடு

சென்னை, மே.24- கொரோனா தடுப்பூசி போடுவதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு யாருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் முறையை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது 18 முதல் 44 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு […]

செய்திகள்

சென்னையில் இருந்து 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை, மே.23- தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– கொரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 10-ந்தேதி முதல் நாளை (திங்கட்கிழமை) வரையில் 2 வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குக்கு உத்தரவிட்டிருந்தார். தற்போது நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாளை காலை முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு தளர்வுகள் […]

செய்திகள்

நாளை முதல் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் வங்கிகள் செயல்படும்

சென்னை, மே 23– தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் வங்கிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த மே 10ந்தேதி முதல் நாளை வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து வங்கிகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டு வந்தன. மேலும் வங்கி பரிவர்த்தனைகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், ஊழியர்களுக்கான வேலை நேரம் மாலை 5 […]

செய்திகள்

மூச்சுத்திணறலை கட்டுப்படுத்த உதவும் மூச்சுப்பயிற்சி

மும்பை, மே 22- நுரையீரல் வெளியில் இருக்கும் ஆக்சிஜனை உடலுக்குள் எடுத்து, அதை சுத்தப்படுத்தி, பின் உடலின் பிற உறுப்புகளுக்கு அந்த ஆக்சிஜனை அளிக்கும் வேலையை செய்கிறது. நம் உடல் உயிர் வாழ மிக முக்கியமான செயல்பாட்டை மேற்கொள்ளும் நுரையீரலை பாதுகாப்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதுவும், குறிப்பாக நுரையீரலை குறிவைத்து தாக்கும் கொரோனா பெருந்தொற்று காலத்தில், நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதே நம்மை காக்கும் ஒரு சிறந்த வழியாக இருக்க முடியும். மூச்சுத்திணறல் இந்த கொரோனா […]