செய்திகள்

10 % மாணவர்களிடமே செல்போன் படிக்க பயன்படுகிறது: ஆய்வு தகவல்

சென்னை, ஜூலை 27– 10 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே செல்போனை, படிப்பதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றன. நேரடி வகுப்புகளிலேயே கவன சிதறல் ஏற்படும்போது ஆன்லைன் வகுப்பில் சொல்லவே வேண்டாம். ஒருசில மாணவர்களே, ஆன்லைன் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், பெரும்பாலானவர்கள் அட்டன்டென்ஸ் போடுவதற்காக வகுப்பில் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆன்லைன் வகுப்பால் ஏற்படும் பாதிப்புகள், […]

செய்திகள்

கொரோனா தொற்றால் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஜூலை 21– கொரோனா தொற்றினால் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் நித்தியானந்த ராய் தெரிவித்தார். மக்களவையில் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில் “மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-ல், பிற்படுத்தப்பட்டோருக்கான, சாதி வாரி விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா? தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுகளில் தொடரும் சட்டச் சிக்கல்களைச் சரி செய்ய, மத்திய அரசால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என மத்திய உள்துறை இணையமைச்சர், நித்தியானந்த ராயிடம், விரிவான கேள்வியை […]

செய்திகள்

தமிழ்நாட்டில் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை, ஜூலை.20- தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனாவுக்கு 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 26ந்தேதி புதிதாக 2 ஆயிரத்துக்கும் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் 114 நாட்களுக்கு பின்னர் நேற்று புதிதாக கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்படுகிறவர்கள் எண்ணிக்கை மீண்டும் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் […]

செய்திகள்

பிளஸ்-2 தேர்வு முடிவு 19-ந் தேதி வெளியீடு

சென்னை, ஜூலை.17- பிளஸ்-2 தேர்வு முடிவு 19-ந் தேதி வெளியாகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. கடந்த கல்வியாண்டு முடிந்து, நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்- அப் வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த கல்வியாண்டில் (2020–-21) மாணவ-–மாணவிகளின் நலன் கருதி, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வு உள்பட மற்ற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வு […]

செய்திகள்

புதுவையில் நாளை பள்ளிகள் திறக்கப்படாது: அரசு அறிவிப்பு

புதுச்சேரி, ஜூலை 15– புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறக்கப்படாது என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலை அடுத்து தமிழகத்தில் கடந்தஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இடையே பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில் 2 ஆவது அலை காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பள்ளி நாளை திறப்பு இல்லை இந்நிலையில், ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. இதனிடையே புதுச்சேரியில் நாளை […]

செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை: தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயராது -அமைச்சர் ராஜகண்ணப்பன்

கும்மிடிப்பூண்டி, ஜூலை.14- பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தபோதும் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயராது என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார். முதலமைச்சரின் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் இயங்கிவரும் சாலைப் போக்குவரத்து நிறுவன பயிற்சி மையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கும்மிடிபூண்டியில் புதிய பணிமனைக்கு இடம் தேர்வு செய்தல் ஆகியவற்றை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்பு, அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–- முதலமைச்சரின் உத்தரவின்படி, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் […]

செய்திகள்

‘‘டெல்டா வைரஸ் மோசமானது’’: அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர்

புதுடெல்லி, ஜூலை 12– ‘‘இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் மோசமானது’’ என அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி தெரிவித்துள்ளார். இந்த டெல்டா வைரஸ் அதிகத் தொற்றுத் தன்மை கொண்டதாக உள்ளது என்றும் அவர் தொடர்ந்து உலக நாடுகளை எச்சரித்து வருகிறார். இதுகுறித்து ஆண்டனி ஃபாசி கூறும்போது, “டெல்டா வைரஸ் மிகக் மோசமான வைரஸ் என்பது தெளிவாகிறது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்று பரவுவதை டெல்டா வைரஸ் அதிகப்படுத்தியுள்ளது. டெல்டா வைரஸை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா சிறப்பாக செயல்படுகிறது. […]

செய்திகள்

தமிழ்நாட்டில் நேற்று 3,211 பேருக்கு தொற்று உறுதி

சென்னை, ஜூலை.9- தமிழ்நாட்டில் நேற்று 3,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 லட்சத்து 53 ஆயிரத்து 575 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,813 ஆண்கள், 1,398 பெண்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 211 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 366 பேரும், ஈரோட்டில் […]

செய்திகள்

இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கு செல்ல வேண்டாம்: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

வாஷிங்டன், ஜூலை 8– கொரோனா தொற்று அச்சம் காரணமாக இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களை அந்த நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது கடந்த ஜனவரி மாதம் முதல் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனிடையே நாட்டில் மீண்டும் வைரஸ் பரவல் ஏற்படாமல் இருக்க ஜனாதிபதி ஜோ பிடன் தலைமையிலான நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் […]

செய்திகள்

52 வது சர்வதேச திரைப்பட விழா: கோவாவில் நவ.20 இல் தொடக்கம்

டெல்லி, ஜூலை 8– 52 வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20 ந்தேதி தொடங்கி 28 ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழா, சுற்றுலா தலமான கோவாவில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி இந்தத் திரைப்பட விழா முடிவடையும். ஆனால், உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்க வேண்டிய விழா, இந்த ஆண்டின் […]