நாடும் நடப்பும்

கொரோனா தடுப்பூசியும் சுறுசுறுப்பாக செயல்பட தயாராகும் சுற்றுலா துறையும்

ஆர். முத்துக்குமார் நம் நாட்டில் பெருவாரியான பொதுமக்களுக்கு எழுந்த மிகப்பெரிய சந்தேகக் கேள்வி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? பின்னர் எழுந்த மற்றொரு சிக்கலான கேள்வி கோவிஷீல்டா? கோவாக்சினா? இந்த சர்ச்சைகளுக்கிடையே நாட்டில் பெருவாரியான பேர் 2 வது தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொண்டு விட்டதால் நிம்மதி பெருமூச்சு விட முடிகிறது. ஆனால் தற்போது எழுந்துள்ள சிக்கல் கோவாக்சினை போட்டுக் கொண்டவர்களுக்குத் தான்! அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இந்திய நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சினை இது வரை ஏற்றுக் […]

செய்திகள்

நாட்டில் இதுவரை 81.85 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

புதுடெல்லி, செப். 21– இந்தியாவில் இதுவரை 81.85 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரியில் தொடங்கிய இந்த பணியில் முன்கள மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. அதனை தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 96 லட்சத்து 46 ஆயிரத்து […]

செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்களில் 52.5 சதவீதம் பேர் ஆண்கள்

சென்னை, செப். 19 நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் ஆண்கள் அதிகம் என தெரியவந்துள்ளது. நாட்டில் கொரோனா பரவலுக்கு எதிராக, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 52.5% ஆண்களும், 47.5% பெண்களும் அடங்குவர். ஏனோ, நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் ஆண்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் பெண்கள் இருக்கிறார்கள். 76 கோடி பேர் நேற்று பிற்பகல் நிலவரப்படி நாட்டில் இதுவரை 76.09 கோடி கரோனா தடுப்பூசி […]

செய்திகள்

உலகில் முதல் முறையாக 2 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி

ஹவானா, செப். 7– உலகில் முதல் முறையாக 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகள், கியூபா நாட்டில் செலுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளிலும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சில நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு […]

செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 45 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

புதுடெல்லி, ஆக. 29– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 083 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே […]

செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்த இனி வாட்சப்பில் முன்பதிவு செய்யலாம்

சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு டெல்லி, ஆக. 24– இனிமேல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாட்சப்பில் முன்பதிவு செய்யலாம் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இதுவரை இந்தியாவில், 58,89,97,805 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இனிமேல் கொரோனா தடுப்பூசி […]

செய்திகள்

2 டோஸ் தடுப்பூசி போட்டும் டெல்டா பிளஸ் கொரோனா: இந்தியாவில் பலியான முதல் பெண்

மும்பை, ஆக. 13– இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டும் கூட, டெல்டா பிளஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மும்பை பெண்ணின் உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா 2 வது அலையில் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 63 வயதுடைய பெண்மணி முதன் முதலாக உயிரிழந்துள்ளார். கடந்த 27 தேதி அவர் உயிரிழந்தது, டெல்டா பிளஸ் கொரோனா வைரசினால்தான் என்பதை மும்பை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பெண்மணி […]

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 38,353 பேருக்கு கொரோனா தொற்று

புதுடெல்லி, ஆக. 11– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 ஆயிரத்து 353 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. நாட்டில் இதுவரை 3 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரத்து 511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 497 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் […]

செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் சென்னை மாநகராட்சி முதல் இடம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை, ஆக.9- பொதுமக்களுக்கு அதிக தடுப்பூசி செலுத்தியதில் சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி முன்கள பணியாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு அரிசி, காய்கறி, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் போரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.10 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வளசரவாக்கத்தில் […]

செய்திகள்

கேரளாவில் கொரோனா தடுப்பூசி தீர்ந்துவிட்டது: அமைச்சர் வீணா ஜார்ஜ்

திருவனந்தபுரம், ஜூலை 31– கேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டில்தான் உள்ளது, ஆனால் தடுப்பூசிகள் தான் தீர்ந்து விட்டது என கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கம் அண்மையில் தான் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அதிலும் குறிப்பாக கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிக அளவில் பரவிக் கொண்டே செல்கிறது.கட்டுப்பாட்டில் கொரோனாகேரளாவில் தினசரி கொரோனாவால் […]