செய்திகள்

பீகாரில் மே 15 வரை முழு ஊரடங்கு அமுல்

பாட்னா, மே.4 பீகாரில் வரும் மே 15ந் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் லாக்டவுன் என்று அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐகோர்ட் தலையிட்டு நடவடிக்கை எடுக்க நேரும் என்று சொல்லப்பட்ட நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக சக அமைச்சர்கள், உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அறிவிப்பை வெளியிட்டார். ஊரடங்கு நாட்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் பற்றி நெருக்கடி […]

செய்திகள்

மதுரை மருத்துவமனையில் 8 பெட்டி ரெம்டெசிவிர் மருந்துகள் திருட்டு

மதுரை, மே 4– மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 பெட்டி ரெம்டெசிவிர் மருந்துகள் திருடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான மருந்துகள் தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்தானது கொரோனா வைரஸிக்கு மிக முக்கியநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இதனால் இதன் தட்டுப்பாடு மிக அதிகளவில் ஏற்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் ரூபாய் 40 ஆயிரத்துக்கும் மேல் ரெம்டெசிவிர் மருந்து விற்கப்பட்ட சம்பவங்களும் நடந்தது. தமிழகத்தில் தென்மாவட்டத்தை […]

செய்திகள்

லேசான கொரோனா அறிகுறிக்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டாம்: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை

டெல்லி, மே 4– லேசான அறிகுறி கொண்ட கொரோனா நோயாளிகள் சி.டி. ஸ்கேன் எடுப்பது உடல்நலத்துக்கு கேடு என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு என்பது கட்டுக்கடங்காமலேயே உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் சி.டி. ஸ்கேன் எடுக்கின்றனர். இந்நிலையில் சி.டி. ஸ்கேன் எடுப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் […]

செய்திகள்

மத்திய அமைச்சரின் மகள் கொரோனா தொற்றுக்கு பலி

இந்தூர், மே 4– மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரின் மகள் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் கெலாட். அவருடைய மகள் யோகிதா சோலங்கிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, முதலில் உஜ்ஜைனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நலம் மோசமடைந்ததால், இந்தூரில் உள்ள மெதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 80 சதவீத நுரையீரல் தொற்று ஏற்பட்ட நிலையில், […]

செய்திகள்

இந்தியாவில் 3-வது நாளாக குறைந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, மே 4– இந்தியாவில் தினந்தோறும் ஏற்பட்டு வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3-வது நாளாக குறைந்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இதில் உச்சபட்சமாக கடந்த 1ந்தேதி 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து […]

செய்திகள்

தடுப்பூசி பற்றாக்குறை ஜூலை வரை தொடரும்: சீரம் நிறுவன நிர்வாகி தகவல்

லண்டன், மே 3– இந்தியாவில் ஜூலை மாதம் வரை தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். கொரோனா 2வது அலையில் இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் லண்டனில் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்த அதார் பூனாவாலா கூறியதாவது:- தற்போது மாதம் ஒன்றுக்கு சீரம் நிறுவனம் 6 முதல் 7 கோடி தடுப்பூசி டோஸ்களை மட்டுமே தயாரித்து வருவதால் […]

செய்திகள்

இந்தியாவிலிருந்து வந்தால் 5 ஆண்டு ஜெயில்:ஆஸ்திரேலிய அரசின் அதிரடி உத்தரவு

சிட்னி, மே.1– இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாடு அதிரடியாக அறிவித்துள்ளது. தங்கள் நாட்டில் உருமாறிய வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்றின் 2வது அலை இந்தியாவை புரட்டிப் போட்டிருக்கிறது. தினமும் 4 லட்சத்துக்கு மேற்பட்ட பாதிப்புகளும், 3,500-ஐ தாண்டி விட்ட உயிரிழப்புகளும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படி கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் […]

செய்திகள்

தொற்றுப் பரவல் பகுதிகளில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குங்கள் – மத்திய உள்துறை அமைச்சகம்

டெல்லி, ஏப். 30– மே 31 ந்தேதி வரை செயல்படுத்த வேண்டிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை, முறையாக பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவறுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தினமும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவதுடன், ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும், மே 31 வரை ஊரடங்கு விதிமுறைகள் நீடிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் […]

செய்திகள்

ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி

ஜெய்பூர், ஏப். 29– ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் முதல்வர் அசோக் கெலாட் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதனிடையே அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அசோக் கெலாட், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், […]

செய்திகள்

1 1/2 லட்சம் லிட்டர் ஆக்சிஜன் பயன்படுத்தியதற்கு 10 மரங்கள் நடுங்கள்: மருத்துவமனை கோரிக்கை

நாக்பூர், ஏப். 27– ஒரு வாரத்தில் 1 1/2 லட்சம் லிட்டர் ஆக்சிஜனை கொரோனா நோயாளி பயன்படுத்தியதற்கு, 10 மரங்களையாவது நட வேண்டும் என்று மருத்துவமனை கோரிக்கை வைத்துள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருப்பதால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாக்பூரிலுள்ள ‘கெட் வெல்’ மருத்துவமனையில் 41 வயதுடைய பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு வாரம் முழுவதும் ஐசியு-வில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. […]