சென்னை, டிச.13- மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும், ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. நடைமுறைக்கு ஒவ்வாத, மக்களாட்சிக்கு எதிரான இந்த நடவடிக்கை, மாநிலங்களின் குரலை அழித்து விடும்; கூட்டாட்சியியலைச் சிதைத்துவிடும்; அரசின் ஆட்சி நிர்வாகத்துக்குத் தடையை […]