சென்னை, செப். 28– பத்திரப்பதிவு டி.ஐ.ஜி. ரவீந்திரநாத் மீது 2வது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் ரவீந்திரநாத். கடந்த 2021-ம் ஆண்டு இவர், தென்சென்னை பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றியபோது தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு சொத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பதிவு செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, […]