வயநாடு, ஆக. 1கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கையில், மேப்பாடி சூரல்மலை ஆகிய மலைப்பகுதிகளில் கடந்த திங்களன்று நள்ளிரவில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இன்று ஒரே நாளில் 98 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.மீட்கப்படும் சடலங்கள் சூரல்மலை பள்ளிகளில் ப்ரீசரில் வரிசையாக வைக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகிறது. அடையாளம் காணமுடியாத அளவுக்கு சடலங்கள் சிதைந்து காணப்படுகின்றன. மருத்துவமனையில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். […]