மேட்டூர், ஆக. 12– இந்த ஆண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கர்நாடக அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த மாதம் 30-ந் தேதி மாலை மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியதுடன் உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் கடந்த 7ந் தேதி முதல் […]