சென்னை, ஜன.6– ஜனவரி 11–ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்கள் சந்திப்பில், அப்பாவு கூறியதாவது: இன்று சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடர் பற்றி முடிவெடுக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் மறைவுக்கு சட்டசபையில் நாளை (7–ந்தேதி) இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும். அடுத்து 4 நாள்கள், அதாவது ஜனவரி 11–ந்தேதி வரை தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். கவர்னர் உரை மீதான […]