ஆறு காலப் பூஜையில் முதல் பூஜை நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் ஆங்காங்கே வழிபட்டுச் சென்று கொண்டிருந்தார்கள். மந்திரங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. பக்திக் கோஷங்கள் விண்ணைப் பிளந்து கொண்டிருந்தன. நல்லது செய்தவர்கள் . கெட்டது செய்தவர்கள் என்று தங்கள் குறைகளை அந்தச் சன்னதியில் கொட்டிக் கொண்டிருந்தார்கள். திவாகர் மனைவி தமிழ்நதி குழந்தை ஷர்மியுடன் வழிபாட்டுத் தலத்தில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தான். அவனின் மூன்று வயது குழந்தை ஷர்மி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தாள். “அங்கெல்லாம் […]