சென்னை, ஏப். 17– கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க சீரிய பணியாற்றிய காவல் ஆய்வாளர்களை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். 26.03.2021 அன்று மயிலாப்பூர் பிஎன்கே கார்டன் 6வது தெருவில் வசித்து வந்த கபாலி என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அப்போதைய மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.மீனாட்சி சுந்தரம் தலைமையிலான காவல் குழுவினரால் முறையாக விசாரிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தயார் செய்து, 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் […]