தலையங்கம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ரூ.15 கோடி என்ற பெரும் அளவு பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் வழக்கு நீதித்துறையின் சுதந்திரம், நேர்மை, நம்பகத்தன்மை குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. மார்ச் 14 அன்று யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, அதிகளவில் பணம் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் ‘உள் விசாரணை’க்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் மூன்று நீதிபதிகள் […]