திருவனந்தபுரம், டிச. 19– வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவிற்கு வந்த 2 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் கண்ணூருக்கு வந்த 2 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 2 பேரும் பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் உத்தரவு இதனைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் கூடுதலாக தனி வார்டுகளை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு, […]