புதுடெல்லி, செப்.13-– தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தியது. காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 103-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட 4 மாநில நிர்வாகிகளும் அவர்களது தலைமையிடத்தில் இருந்து கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு சார்பில் அரசு உறுப்பினரும், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளருமான ஆர்.தயாளகுமார் திருச்சியில் இருந்தும், பிற அதிகாரிகள் சென்னையில் இருந்தும் பங்கேற்றனர். […]