லா பாஸ், மார்ச் 4- தெற்கு பொலிவியாவில் நெடுஞ்சாலையில் சென்ற டிரக் ஒன்று பேருந்து மீது மோதியதில், பஸ் பள்ளதில் விழுந்ததில் 31 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொலிவியன் அல்டிப்லானோவில் உள்ள ஓருரோ மற்றும் ஹைலேண்ட் சுரங்க நகரமான பொட்டோசி ஆகியவற்றுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பேருந்து மீது டிரக் ஒன்று மோதியது. இந்த மோதலில் பேருந்து சுமார் 500 மீட்டர் (1,640 அடி) பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 31 […]