செய்திகள்

கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த அரசு முடிவு

சென்னை, மார்ச்.31-– தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் 16 மாவட்டங்களில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த தலைமைச்செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–- தமிழகத்தில் தினசரி கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவது குறித்த ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தற்போதைய கொரோனா நோய் தொற்று நிலை குறித்த விவரங்களை சமர்ப்பித்தார். அதன்படி […]

செய்திகள்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவு மையம்

காஞ்சீபுரம், மார்ச் 11–- வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் 100% வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்வதை உறுதி செய்யும் வகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்டம் மகளிர் திட்டம் சார்பில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களை கவரும் வகையில் அச்சமின்றி வாக்குப் பதிவு செய்வதில் பயிற்சி பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி […]

செய்திகள்

காஞ்சீபுரத்தில் மகளிர் தினத்தையொட்டி 100% வாக்களிப்பதை வலியுறுத்தி கோலப் போட்டி

காஞ்சீபுரம், மார்ச் 9–- காஞ்சீபுரத்தில் மகளிர் தினத்தையொட்டி 100% வாக்களிப்பதை ஊக்குவிக்கும் நோக்குடன் கோலப் போட்டி நடைபெற்றது. மேலும் 200க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் துவங்கி வைத்தார் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி 100% வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் பேரணிகளை நடத்தி வருகிறது. மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோலப் போட்டி […]

செய்திகள்

வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல்கள் எண்ணிக்கை:ரூ.51.68 லட்சம் வசூல்

காஞ்சீபுரம், மார்ச் 3–- வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம், திருவேங்கடம் ஆகிய திருத்தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் அத்திவரதர் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் உள்ள 5 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயா தலைமையில் அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா முன்னிலையில் கடந்த 9 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் காணிக்கை செலுத்த வைக்கப்பட்ட 5 உண்டியல்கள் திறக்கப்பட்டன. உண்டியல்களில் இருந்த காணிக்கையை கோயில் […]

செய்திகள்

வீடு வீடாக சென்று அண்ணா தி.மு.க.வின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் ஏற்பாடு

காஞ்சீபுரத்தில் இளைஞர் பாசறை ஆலோசனை கூட்டம் வீடு வீடாக சென்று அண்ணா தி.மு.க.வின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் ஏற்பாடு காஞ்சீபுரம், மார்ச் 3 – காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெரு அருகில் மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் ஏற்பாட்டின்பேரில் அண்ணா தி.மு.க. இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பாசறை செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வி.பி.பி. பரமசிவம், மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் […]

செய்திகள்

காஞ்சீபுரம் டாக்டர் சத்தியநாராயணனுக்கு முதலமைச்சர் ‘கலைமாமணி விருது’ வழங்கி பாராட்டு

காஞ்சீபுரம், பிப். 27- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 2019 மற்றும் 2020ம் ஆண்டிற்கான கலைத்துறையில் சிறப்பான சேவை புரிந்த கலைஞர்களுக்கு மாநில அளவில் கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருது களை வழங்கி கௌரவித்தார். அந்த வகையில் 2019ம் ஆண்டிற் கான சிறந்த மருத்துவ நூலாசிரியர் என்பதற்கான கலைமாமணி விருது […]

செய்திகள்

காஞ்சீபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா

காஞ்சீபுரம், பிப்.25 – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளை சிறப்பிக்கும் விதமாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லூறவு மைய கூட்டரங்கில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியை அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் நலிவுற்ற மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி […]

செய்திகள்

காஞ்சீபுரத்தில் குடிநீர் கேன்களில் சரிவிகித உணவு குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவக்கம்

காஞ்சீபுரம், பிப்.24 – சரிவிகித உணவு உட்கொள்ளுதல் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காஞ்சீபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஓர் பகுதியாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் கேனில் சரிவிகித உணவு உட்கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலையின் குடிநீர் கேன்களில் மாவட்ட கலெக்டர் […]

செய்திகள்

சரிவிகித உணவு உட்கொள்ளுதல் குறித்து ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி

காஞ்சீபுரம், பிப்.20–- தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் சரியான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காஞ்சீபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக காஞ்சீபுரம் நகரப் பகுதிகளில் ஓடும் ஆட்டோக்களில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சரியான ஊட்டச்சத்து உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் […]

செய்திகள்

காஞ்சீபுரம் அரசு அருங்காட்சியகத்தில் புராதன சின்னங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

காஞ்சீபுரம்,பிப்.18–- காஞ்சீபுரம் பழைய ரெயில் ரோட்டில் மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு பல்லவர் கால புராதன சின்னங்கள், எலும்பு துண்டுகள், பானை ஓடுகள், கற்சிற்பங்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவ, மாணவிகளுக்கு இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள புராதன சின்னங்கள் குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் சு.உமாசங்கர் விளக்கமளித்தார். மேலும் புராதனை சின்னங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து கோரக்கர் அறிவர் பள்ளியைச் சேர்ந்த ஆதிசங்கரன் […]