செய்திகள்

தங்கத்தின் மீதே பினராயிக்கு கண்: கம்யூனிஸ்டு மீது பிரியங்கா தாக்கு

திருவனந்தபுரம், மார்ச் 31– தங்கத்தின் மீதே பினராயிக்கு கண் என்று கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு கேட்ட பிரியங்கா காந்தி, கம்யூனிஸ்டுகளை தாக்கி தேர்தல் பிரச்சாரம் செய்தார். கேரள மாநிலம் வந்த கிழக்கு உத்திரபிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கருநாகப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில், திரளான மக்கள் மத்தியில் உரையாற்றினார். காங்கிரசுக்கு, கேரள மக்கள் தான் உண்மையான தங்கம். முதல்வர் பினராயி விஜயன் வெளிநாட்டு தங்கத்தின் மீது மோகம் கொண்டிருக்கிறார். வெளிநாட்டு தங்கத்தின் […]

செய்திகள்

பிரியங்காவின் தமிழக வருகை: ஏப்ரல் 3 ந் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி, மார்ச் 26– காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, நாளைய தினம் வருவதாக திட்டமிடப்பட்டிருந்த தமிழக வருகை, ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் பிரசாரம் 4 ந் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. தேர்தல் நெருங்கி வரும் அதே வேளையில், அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 3 […]

Uncategorized

வேட்பாளர் கிடைக்காததால் ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியில்லை

புதுச்சேரி, மார்ச் 20– வேட்பாளர் கிடைக்காததால் ஏனாம் தொகுதியில் போட்டியிடும் முடிவை காங்கிரஸ் கட்சி கடைசிநேரத்தில் கைவிட்டுள்ளது காங்கிரஸ் சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. கூட்டணி தொகுதி பங்கீட்டில் 15 தொகுதி பெற்றாலும், காங்கிரஸ் 14 தொகுதியில்தான் போட்டியிடுகிறது. புதுவை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 30 தொகுதியில் காங்கிரஸ் 15, தி.மு.க. 13, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு தொகுதி பிரித்துக் கொண்டன. இதில் காங்கிரஸ் போட்டியிடும் […]

செய்திகள்

வேட்பாளர் தேர்வில் குளறுபடிகள்

– சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.பி. திடீர் உண்ணாவிரதம் சென்னை, மார்ச் 13– காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காங்கிரஸ் எம்.பி. டாக்டர் விஷ்ணு பிரசாத் தலைமையில் காங்கிரசார் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர். தி.மு.க. கூட்டணியில் 25 இடங்களை மிகப்பெரிய இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் பெற்றது. போராடி பெற்ற இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது. காங்கிரசை பொறுத்தவரை கட்சியை விட கோஷ்டிகளே […]

செய்திகள்

காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு

சென்னை, மார்ச்.12- தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள் பட்டியல் அடங்கிய உடன்பாடு ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கையெழுத்திட்டுள்ளனர். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:- 1. பொன்னேரி (தனி), 2. ஸ்ரீபெரும்புதூர் (தனி), 3.சோளிங்கர், 4. ஊத்தங்கரை (தனி), 5.ஓமலூர், 6. உதகமண்டலம், 7. கோவை தெற்கு, 8. காரைக்குடி, 9.மேலூர், 10.சிவகாசி, 11.ஸ்ரீவைகுண்டம், 12.குளச்சல், […]

செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் இழுபறி நீடிப்பு

சென்னை, மார்ச் 5– தி.மு.க. கூட்டணியில் 3வது நாளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் காங்கிரஸ் கடந்த 2016 பொதுத்தேர்தலின் போது 41 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 8 இடங்களில் தான் வெற்றி பெற்றது. இதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு […]

செய்திகள்

தி.மு.க. கூட்டணி: தொகுதி பங்கீட்டில் இழுபறி நீட்டிப்பு

சென்னை, மார்ச் 4– தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. ஆகியவை அதிக இடம் கேட்டு போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள். தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்டு பிடிவாதம் பிடிக்கின்றன. இந்த கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வரை ஒதுக்க தி.மு.க. முன் வந்துள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. வெற்றிபெறும் அளவு தொகுதியில் நில்லுங்கள், சின்னம் இல்லாதவர்கள் தி.மு.க. சின்னத்தில் நில்லுங்கள் என்று தி.மு.க. தரப்பில் […]