வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் எல்லாம் நெடுஞ்சாலையில் உள்ள அந்த ஓட்டலில் நின்று தான் செல்லும். ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் இலவசமாக உணவு கொடுக்கிறார்கள் என்பதால் அந்த நெடுஞ்சாலை ஓட்டலில் பஸ் பயணிகளை இறக்கிவிட்டு இருபது நிமிடம் வண்டி நிற்கும் என்ற அறிவிப்பையும் சொல்லிவிட்டு இறங்குவார்கள் ஓட்டுனர்கள், நடத்துனர்கள். அந்த அத்துவான ரோட்டில் வேறு வழியின்றி பயணிகள் அந்த உணவகத்தில் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார்கள். அதைவிடக் கொடுமை பயணிகளை வேறு எங்கும் சிறுநீர் கழிக்க […]