சென்னை, அக். 25 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு காலப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பொதுவாக, அரசுப் பணியிலிருந்தோ, பொதுத் துறை நிறுவனங்களிலிருந்தோ அல்லது தனியார் நிறுவனங்களிலிருந்தோ ஓய்வு பெறும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, ஓய்வு பெறும் தினம் அன்றே, அவர்களுக்கு உண்டான வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, […]