சென்னை ஐகோர்ட் உத்தரவு சென்னை, ஜூலை 24– முதல்வர் ஸ்டாலின் அல்லது அமைச்சர் உதயநிதி, கல்வராயன் மலைப்பகுதிக்கு நேரில் சென்று மக்கள் நிலையை ஆய்வு நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வராயன் மலையில் வசித்து வரும் மக்கள் மேம்பாடு தொடர்பாக, சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு […]