சென்னை, பிப்.19-– ‘பெஞ்ஜல்’ புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.499 கோடி நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ‘பெஞ்ஜல்’ புயலின் காரணமாக வரலாறு காணாத அதிகனமழை பெய்தது. இதனால் கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட தோடு, வீடுகள், சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதம் அடைந்து, […]