செய்திகள்

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு: காஞ்சீபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம், மார்ச் 27–- காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2101 பேர் அஞ்சல் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 28, 30 ஆகிய தேதிகளில் அவர்களது வீடுகளுக்கே இக்குழுக்கள் சென்று அஞ்சல் […]

செய்திகள்

கால்வாயில் கிடந்த கோவில் கல்தூண்கள் மீட்பு

காஞ்சீபுரம், மார்ச் 26–- காஞ்சீபுரம் பஞ்சுப்பேட்டை மின்சார அலுவலகம் அருகே உள்ள ஒரு கால்வாயில் பழமை வாய்ந்த கோவில் கல்தூண்கள் கேட்பாரற்று கிடப்பதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கல்தூண்களை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பாக வைக்கும்படி அறநிலையத் துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பொ.ஜெயராமன், உதவி ஆணையர் ஜெயா, கோவில் செயல் அலுவலர்கள் என்.தியாகராஜன், […]

செய்திகள்

எழிச்சூரில் கொரோனா பராமரிப்பு மையம்: காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம், மார்ச் 26–- காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட எழிச்சூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தங்கும் விடுதியான 500 படுக்கைகள் கொண்டு தயார் நிலையில் உள்ள கொரோனா பராமரிப்பு மையத்தில் அமைந்துள்ள உள்கட்டமைப்பு வசதிகளான படுக்கை அறைகள், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக, ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளான குன்றத்தூர் […]

செய்திகள்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவு மையம்

காஞ்சீபுரம், மார்ச் 11–- வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் 100% வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்வதை உறுதி செய்யும் வகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்டம் மகளிர் திட்டம் சார்பில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களை கவரும் வகையில் அச்சமின்றி வாக்குப் பதிவு செய்வதில் பயிற்சி பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி […]

செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சீபுரம், மார்ச் 10 – சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காஞ்சீபுரம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்தார். வரும் தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் வாக்காளர்கள் உறுதிமொழியை […]

செய்திகள்

காஞ்சீபுரத்தில் மகளிர் தினத்தையொட்டி 100% வாக்களிப்பதை வலியுறுத்தி கோலப் போட்டி

காஞ்சீபுரம், மார்ச் 9–- காஞ்சீபுரத்தில் மகளிர் தினத்தையொட்டி 100% வாக்களிப்பதை ஊக்குவிக்கும் நோக்குடன் கோலப் போட்டி நடைபெற்றது. மேலும் 200க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் துவங்கி வைத்தார் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி 100% வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் பேரணிகளை நடத்தி வருகிறது. மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோலப் போட்டி […]

செய்திகள்

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாதிரி வாக்குப்பதிவு முகாம்

காஞ்சீபுரம், மார்ச் 6-– தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு மாதிரி வாக்குப்பதிவு முகாம் நடைபெற்று வருகிறது. இதற்காக 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. அதனடிப்படையில் காஞ்சீபுரம் பேருந்து நிலையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான […]

செய்திகள்

காஞ்சிபுரத்தில் ரூ.25 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி: எடப்பாடி திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்,பிப்.27-– காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.24 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். சுற்றுலா நகரமான காஞ்சிபுரத்திற்கு பக்தர்கள் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் விடுதிகள், வாகன நிறுத்தம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியின் மூலம் காஞ்சிபுரம் ஒலிமுகமதுப்பேட்டை அருகே ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் […]

செய்திகள்

காஞ்சீபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா

காஞ்சீபுரம், பிப்.25 – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளை சிறப்பிக்கும் விதமாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லூறவு மைய கூட்டரங்கில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியை அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் நலிவுற்ற மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி […]

செய்திகள்

காஞ்சீபுரத்தில் குடிநீர் கேன்களில் சரிவிகித உணவு குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவக்கம்

காஞ்சீபுரம், பிப்.24 – சரிவிகித உணவு உட்கொள்ளுதல் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காஞ்சீபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஓர் பகுதியாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் கேனில் சரிவிகித உணவு உட்கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலையின் குடிநீர் கேன்களில் மாவட்ட கலெக்டர் […]