செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பொது பார்வையாளர்களிடம் புகார் அளிக்கலாம்

திருவள்ளூர், மார்ச் 23– திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பொது பார்வையாளர்களை, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து புகார்களை அளிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் பா.பொன்னையா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற தேர்தல் 2021-யை முன்னிட்டு. திருவள்ளுர் மாவட்டத்தில் பணியில் உள்ள தேர்தல் (பொது) மற்றும் காவல் பார்வையாளர்கள், திருவள்ளுர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்கள். எனவே, திருவள்ளுர் மாவட்ட […]

செய்திகள்

திருவள்ளூரில் 26–ந் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர், பிப். 23– திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 26–ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் பா.பொன்னையா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் வௌ்ளிக்கிழமை தோறும் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதனடிப்படையில் வரும் […]

செய்திகள்

திருவாலங்காடு, பூண்டி ஊராட்சிகளில் அம்மா மினி கிளினிக்குகள்

அமைச்சர் பென்ஜமின் திறந்து வைத்து பார்வையிட்டார் திருவள்ளூர், பிப். 22– திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் பூண்டி ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட 4 ஊராட்சிகளில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் பென்ஜமின் திறந்து வைத்து அங்கு பொது மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்டார். திருவள்ளுர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் பூண்டி ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் 4 ஊராட்சிகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வாயிலாக முதலமைச்சரின் அம்மா […]

செய்திகள்

இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு மீனவ சமுதாய இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி

திருவள்ளூர், பிப். 15– இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு ஆயத்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று திருவள்ளூர் கலெக்டர் பா.பொன்னையா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை அமைச்சர் 11.07.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்ததன்படி மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் 20 […]

செய்திகள்

மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி: கலெக்டர் பொன்னையா துவக்கி வைத்தார்

திருவள்ளூர், பிப். 5– திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், ஒதப்பை ஊராட்சி குளத்தில் மீன்வளத்துறை சார்பாக, மீன்குஞ்சுகளை இருப்பு செய்தல் திட்டத்தில், மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா மீன்குஞ்சுகளை இருப்பு செய்யும் பணிகளை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2020-–2021-ன் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை குளங்களில் மீன்குஞ்சு இருப்பு செய்தல் திட்டத்திற்காக ரூ.101 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒதப்பை, […]

செய்திகள்

15, 26, 28–ந் தேதி மதுக்கடைகள் மூடப்படும்: திருவள்ளூர் கலெக்டர்

திருவள்ளூர், ஜன. 11 திருவள்ளூர் மாவட்டத்தில் 15, 26 மற்றும் 28 ந் தேதிகளில் மதுக்கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் பா.பொன்னையா அறி வித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003-ன்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிப மதுபான சில்லறை வி்ற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், […]

செய்திகள்

இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு: திருவள்ளூர் கலெக்டர்

திருவள்ளூர், ஜன. 1– இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தில் இணைய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று திருவள்ளூர் கலெக்டர் பா.பொன்னையா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு பெண் குழந்தைக்கு ரூ.25,000 வீதம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000 பயனடைய, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நலத்துறை பணியாளர்களிடம் கீழ்காணும் ஆவணங்களை அளித்து இ-சேவை […]