செய்திகள்

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு

திருவண்ணாமலை, மார்ச் 5– 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல்- 2021 முன்னிட்டு அனைத்து தரப்பு வாக்காளர்களிடம் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் மற்றும் ஜனநாயக கடமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று திருவண்ணாமலை நகராட்சி ஈசான்ய மைதானத்தில் திருநங்கை மற்றும் நரிக்குறவர் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கலெக்டர் […]

செய்திகள்

456 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி இலவச வீட்டுமனைப் பட்டா

ஆரணி, பிப். 22– 456 பயனாளிகளுக்கு ரூ.2.01 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஆரணி, வந்தவாசி, சேத்பட் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 456 பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டத்தின் கீழ் ரூ.2.01 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, 964 பயனாளிகளுக்கு ரூ.2.85 கோடி மதிப்பில் முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் […]

செய்திகள்

இருளர் குடிசை கிராமத்தில் புதிய தொடக்கப்பள்ளி: சேவூர் ராமச்சந்திரன் திறந்தார்

தண்டராம்பட்டு, பிப்.2– திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், மோத்தக்கல் ஊராட்சி, இருளர் குடிசை கிராமத்தில் பள்ளிக்கல்வித் துறை மூலமாக புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். மேலும் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ண பென்சில் ஆகியவற்றை வழங்கினார். இங்கு, பள்ளிக் கல்வித்துறை மூலமாக 70 அரசு தொடக்கப் பள்ளிகள், 26 அரசு நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. மேலும், ஒரு ஆதிதிராவிடர் பள்ளி, […]

செய்திகள்

ஜவ்வாதுமலையில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்: கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு

போளூர், ஜன.7– திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைஒன்றியம் கோவிலூர் ஊராட்சி ஜமுனாமரத்துரில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக ஜவ்வாது மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்காக மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் 2019–2020 ஆம் ஆண்டு ரூ 2 கோடி மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் சாமை, அரிசி, தேன், மிளகு,புளி, ஆகிய பொருட்கள் உற்பத்தி செய்து சந்தை படுத்தும் ஜவ்வாதுமலை […]