செய்திகள்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி: கலெக்டர் அண்ணாதுரை திறந்து வைத்தார்

விழுப்புரம், மார்ச் 27– விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தோ்தல் – 2021 முன்னிட்டு பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் ஆ.அண்ணாதுரை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 6–ந் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பொது மக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழுப்புரம் புதிய […]

செய்திகள்

தேர்தல் அலுவலர்களின் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணி

விழுப்புரம், மார்ச் 26– விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்களின் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணியினை கலெக்டர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2021 முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்தல், வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை கண்காணித்தல், வாக்குச்சாவடி மையங்களில் 100 மீட்டர் எல்லைப்பகுதிகள் அமைப்பதை கண்காணித்தல் மற்றும் […]

செய்திகள்

அனைத்து வாக்குசாவடிகளுக்கும் சக்கர நாற்காலிகள்: விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து வாக்குசாவடிகளுக்கும் சக்கர நாற்காலிகள்: விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார் விழுப்புரம், மார்ச் 4– விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் அனைத்து வாக்குசாவடிகளுக்கும் சக்கர நாற்காலிகளை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஆ.அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது: ஒவ்வொரு […]

செய்திகள்

விழுப்புரத்தில் காவல்துறை கொடி அணிவகுப்பு: கலெக்டர் அண்ணாதுரை பங்கேற்பு

விழுப்புரம், மார்ச் 3– ஜனநாயக முறைப்படி வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழுப்புரத்தில் காவல்துறை கொடி அணிவகுப்பு கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2021 முன்னிட்டு பொதுமக்களுக்கு அச்சமின்றி ஜனநாயக முறைப்படி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மத்திய காவல் படையினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை தெரியப்படுத்தும் விதமாக கொடி […]

செய்திகள்

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்த பயிற்சி

விழுப்புரம், மார்ச் 2– விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்த பயிற்சி வகுப்பை கலெக்டர் அண்ணாதுரை துவக்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2021 முன்னிட்டு தோ்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை கையாள்வது குறித்த பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் […]

செய்திகள்

விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம், மார்ச் 1– விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தேர்தல் – 2021 நன்னடத்தை விதிமுறைகள் குறித்து தேர்தல் பறக்கும்படை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது: 2021- சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக விழுப்புரம் […]

செய்திகள்

விழுப்புரத்தில் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம்: மாணவர்கள், பொதுமக்கள் வரவேற்பு

விழுப்புரம், பிப். 27– விழுப்புரத்தில் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். இதற்கு மாணவர்கள், பொது மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் கீழ், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கலை -அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக இருந்து வரும் விழுப்புரம் மாவட்டத்தை தலைமையிடமாகக் […]

செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 22–ந் தேதி விழுப்புரம் வருகை

விழுப்புரம், பிப். 18– 22–ந் தேதி விழுப்புரத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்காவுடன் கூடிய குளத்தை திறந்து வைக்கிறார். விழுப்புரத்தில் வருகிற 22-ந் தேதி பூங்காவுடன் கூடிய குளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இதையொட்டி விழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் சி.வி சண்முகம் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: விழுப்புரம் நகராட்சியின் நூற்றாண்டு விழாவையொட்டி நகராட்சியை அழகுப்படுத்திடவும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மூலம் மேம்படுத்தவும் தமிழக அரசு, சிறப்பு நிதியாக […]

செய்திகள்

விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு செயற்குழு கூட்டம்

விழுப்புரம், பிப் .10– விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமுக நலத்துறை சார்பாக “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்திற்கான மாவட்ட அளவிலான சிறப்பு மாவட்ட செயற்குழுக்கூட்டம் கலெக்டர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2020-–2021ம் ஆண்டிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நிகழ்வுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ,ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது :- பெண் குழந்தைகள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய ஏதுவாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. […]

செய்திகள்

மயிலம், மரக்காணம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகள்:

விழுப்புரம், பிப். 2– விழுப்புரம் மாவட்டம் மயிலம் மற்றும் மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை சட்டம், நீதிமன்றங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார். முதலமைச்சர் தமிழகத்தில் வசிக்கும் ஏழை எளிய பாமர மக்கள் நல்ல சிகிச்சை பெற வேண்டும் என்பதற்க்காக ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என அறிவித்து இத்திட்டத்தினை […]