சென்னை, பிப்.5– திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படுத்த நினைத்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என பா.ஜ.க.வினரை அமைச்சர் பி.கே. சேகர்பாபு எச்சரித்துள்ளார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று சென்னை, ஓட்டேரி ஆதி படவேட்டம்மன் திருக்கோயிலில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:– இந்த அரசு ஏற்பட்ட பின், இதுவரை 2,504 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளதோடு, வருகின்ற 9 […]