செய்திகள்

கர்நாடகாவில் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: காய்கறி, பழங்கள் விலை உயர வாய்ப்பு

ஒசூரில் காத்திருக்கும் நூற்றக்கணக்கான லாரிகள் ஒசூர், ஏப். 15– கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வை எதிர்த்து நேற்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கியுள்ளது. இதனால், தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள், கர்நாடக எல்லையான ஒசூரில் நூற்றக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் புதிய டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வு குறித்து இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கர்நாடக […]

Loading

செய்திகள்

ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 51 சதமாக உயர்த்த கர்நாடகா அரசு முடிவு

பெங்களூரு, ஏப். 14– சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் ஓபிசி இட ஒதுக்கீட்டை 51 சதவீதமாக உயர்த்த கர்நாடகா அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவிடம் சாதிவாரி கணக்கெடுப்பு ஆணைய தலைவர் ஜெயபிரகாஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை கொடுத்திருந்தார். இந்த அறிக்கை கர்நாடகா கேபினட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 51 சதமாக உயர்த்த பரிசீலனை அதன்படி, கர்நாடகத்தில் தற்போது […]

Loading

செய்திகள்

கர்நாடகாவில் பைக் டாக்ஸிகளுக்கு தடை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க மாநில அரசுக்கு 6 வாரம் அவகாசம் பெங்களூரு, ஏப் 3– கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்ஸி சேவைகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே 6 வாரங்களில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்த பின், மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. பெங்களூருவில் ரேபிடோ, ஊபர், ஓலா உள்ளிட்ட சில […]

Loading

செய்திகள்

கர்நாடகா, கல்பாக்கம் அனல் மின்நிலையத்தில் இருந்து 526 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்

ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிப்பு சென்னை, பிப்.15-– தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், சென்னை கல்பாக்கம் அனல்மின் நிலையத்திடமிருந்து 330 மெகாவாட் மற்றும் கர்நாடகாவில் உள்ள கைகா அனல்மின் நிலையத்தில் இருந்து 196 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்கிறது. இதற்கான ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்திற்கு 526 மெகாவாட் மின்சாரம் வருகிற 15 ஆண்டுகளுக்கு தடையின்றி கிடைக்கும் என்று தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மின் கொள்முதல் ஒப்பந்தமானது, தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையின் […]

Loading

செய்திகள்

கர்நாடகாவில் எச்.எம்.பி.வி. தொற்று : தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

ஓசூர், ஜன. 7– கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடகா – தமிழக எல்லையில் சுகாதாரப் பணியாளர்கள் கணிகாணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்டுள்ள எச்.எம்.பி.வி. என்ற நுரையீரலை பாதிக்கும் புது வகையான வைரஸ் தொற்று, கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த, 8 மாதம், 3 மாத குழந்தை என இருவருக்கு இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று, ஒருவரிடம் இருந்து […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பெங்களூருவின் சிற்பி எஸ்.எம். கிருஷ்ணா மறைவு

தலையங்கம் கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் பெங்களூருவை இந்தியாவின் ஐடி தலைநகரமாக மாற்றிய ஆற்றல்மிக்க தலைவருமான எஸ்.எம். கிருஷ்ணா பழத்த பழமாக தமது 91வது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார். தமிழகத்தையும் கர்நாடகாவையும் இணைக்கும் பல முயற்சியை முடுக்கிவிட்டவர், அதற்காக பல முன்னோடி முயற்சிகளை எடுத்த நல்ல தலைவரும் ஆவார். கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த எஸ்.எம். கிருஷ்ணா பின்னர் அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்தை பயின்ற போது கணினி தொழில்நுட்பத்துடன் பரிச்சயமும் பெற்றார். […]

Loading

செய்திகள்

கர்நாடக அமைச்சரின் மனைவியை கேவலமாக பேசிய பாஜக எம்எல்ஏ

கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பெங்களூரு, அக். 18– கர்நாடக அமைச்சரின் மனைவி குறித்து, அவதூறாக பேசிய பாரதீய ஜனதா எம்எல்ஏ பசன கவுடா பாட்டீலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் குடும்பம் குறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசன கௌடா பாட்டீல் யத்னல், “தினேஷ் குண்டுராவின் குடும்பத்தில் பாதி பாகிஸ்தான் உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி தபஸ்ஸம் ராவ் […]

Loading