சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம்: தமிழக அரசு அறிவிப்பு சென்னை, ஜூலை 13– காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் கைவிரித்து விட்டது. இதனையடுத்து காவிரி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம்–கர்நாடகம் இடையே காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. காவிரி விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு […]