செய்திகள்

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை மையம்

சென்னை, ஏப். 8– தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சில மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாமக்கல், கரூரில் வெப்பம் தமிழகம், […]

செய்திகள்

கரூர் அருகே ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.29 லட்சம் பறிமுதல்

கரூர், மார்ச் 3– கரூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6–ந்தேதி நடைபெற உள்ளது. மே 2–ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு […]

செய்திகள்

“மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி”: கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி

கரூர், பிப். 20 கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அண்ணா திமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார். கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் […]

செய்திகள்

கரூர் நெரூர் கூட்டுறவு வங்கியில் ரூ.11 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி

கரூர், பிப். 8– நெரூர் வடபாகம் ஊராட்சி பகுதியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அம்மா மினி கிளினிக்குகளைத் தொடக்கி வைத்தார். கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் ஊராட்சியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:– ஜெயலலிதா வழியில் செயல்படும் முதலமைச்சர் ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் பாதுகாவலராக இருந்து அவர்களின் சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் […]

செய்திகள்

வெளிமாநில வியாபாரிகள் குறைவால் மாட்டு சந்தையில் கால்நடைகள் விற்பனை மந்தம்

ஈரோடு, பிப். 6– கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் வெளிமாநில வியாபாரிகளின் வருகை குறைந்ததால் மாடுகள் விற்பனை சரிவடைந்தது. ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வியாழக் கிழமைதோறும் மாட்டு சந்தை கூடும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளான சேலம், நாமக்கல், கரூர் போன்ற பகுதிகளில் இருந்து மாடுகள் வரத்தாகும். இந்த மாடுகளை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த […]