செய்திகள்

வாகன விபத்தில் இறந்த 2 காவலர்கள் குடும்பத்திற்கு அதிகாரிகள், காவலர்கள் வழங்கிய ரூ. 28 லட்சம் உதவி தொகை

சென்னை, மார்ச் 4– வாகன விபத்தில் இறந்த ஆயுதப்படையை சேர்ந்த இரண்டு காவலர்களின் குடும்பத்திற்கு சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அளித்த ரூ.28 லட்சத்திற்கான காசோலையை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார். இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா, எமனேஸ்வரம் அஞ்சல், கமலா நேரு நகரைச் சேர்ந்த பி.ரவீந்திரன் மற்றும் திருப்பூர் மாவட்டம், கொமரலிங்கம் மேற்கு கிராமத்தைச்சேர்ந்த வி.கார்த்திக் ஆகிய இருவரும் 2013ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலராக […]

செய்திகள்

குற்றவாளிகளை கைது செய்ய உதவிய காவலர்கள்: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் பாராட்டு

சென்னை, மார்ச் 1– அமைந்தகரை பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய உதவிய வியாசர்பாடி காவல் குழுவினரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை, அமைந்தகரை, வெள்ளாளர் தெரு, எண்.2/3, என்ற முகவரியில் ஜெயந்தி (45), தனது மகள் மோனிகா (24) என்பவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 26–ந் தேதி சுமார் 25 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் கத்தியுடன் வீட்டில் நுழைந்து ஜெயந்தியின் தலை மற்றும் முதுகிலும், மோனிகாவின் கையிலும் […]

செய்திகள்

குற்றவழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசார்

சென்னை, பிப். 27– சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த விருகம்பாக்கம் மற்றும் பூந்தமல்லி காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னை, சாலிகிராமம், வேலாயுதம் காலனி, மல்லிகை அப்பார்ட்மெண்ட், எண்.3 என்ற முகவரியில் சினிமா புகைப்பட கலைஞர் நியூட்டன் (வயது 44), த/பெ.கஸ்பர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 19–ந் தேதி காலை தனது நண்பர் ஆடிட்டர் ரகுஜி என்பவரை பார்க்க செல்வதாக […]

செய்திகள்

சென்னையில் புத்தக கண்காட்சி: ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

‘புத்தக வாசிப்பு மூலம் சிந்தனை மேம்படும்’ என பேச்சு சென்னை, பிப்.25– தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 44வது புத்தக கண்காட்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றியும், ரிப்பன் வெட்டியும் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், புத்தகங்கள் வாசிப்பதன் மூலமாக ஒருவரின் சிந்தனை திறன் மேம்படும், சொல் வளமும், கற்பனை […]

செய்திகள்

சென்னை நகரில் 80% சாலை விபத்து குறைந்துள்ளன: போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

சென்னை, பிப்.18– சென்னை நகரில் 80 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளதாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். 32வது சாலை பாதுகாப்பு மாதம் நிறைவு பெறுவதையொட்டி சென்னை காவல்துறை சார்பாக புதுப்பேட்டையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் அது தொடர்பான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன், இணைக்கமிஷனர் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த புத்தகம், காலண்டர், […]

செய்திகள்

சென்னை நகரில் 2,614 பிடிவாரண்ட் குற்றவாளிகள் கைது: 89 முக்கிய ரவுடிகள் சிறையில் அடைப்பு

சென்னை, பிப். 8– சென்னை நகரில் 2,614 பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அதிகமான குற்ற வழக்குகளில் தொடர்புடைய 89 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு ரவுடிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவான நபர்களை கைது செய்வதில் காவல்துறையினர் முனைப்பு காட்டிவருகின்றனர். சென்னை நகரில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள், நேரடியாக, மறைமுகமாக குழுக்களாக […]

செய்திகள்

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்காக ‘தோழி’ திட்டம் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பெருமிதம் சென்னை, பிப்.4- பெண்களுக்கான பாதுகாப்பு நகரமாக இந்தியாவிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளதாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான குழந்தைகளுக்கு பல்வேறு வகையில் உதவி செய்வதற்காக சென்னை போலீசில் ‘தோழி’ என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்தப் பயிற்சியின் தொடக்க விழா, சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு […]