“வானம் வசப்படும் என்பார், வையகம் ஆள்வார் என்பார்! சங்க காலம் தொடங்கி இன்று வரை, வரலாற்றில் நீக்கமற நிறைந்தாள்! அவ்வையார் முதல் கமலா ஹாரிஸ் வரை வீட்டிலும் நாட்டிலும் பெரும் பங்காற்றிக்கொண்டே, தியாகத்தின் திருவுருவாய் ஒளிர்கிறாள்! தன்னம்பிக்கை எனும் தாய்ப்பால் ஊட்டி, தரணியை வெல்லும் திறனும் பெற்றாள்! கல்வி, கலை, இலக்கியம், அறிவியல், அனைத்திலும் முத்திரையைப் பதித்தாள்! சமுதாய மாற்றத்தின் சுடர் விளக்காய், மகிழ்ச்சி பொங்கச் சாதித்தாள்! மகளிர் தினத்தில் மட்டும் வணங்காமல், தினந்தோறும் ஏற்றிப் போற்றுவோம்! […]