சென்னை, ஆக.31- கன்னியாகுமரியில் இயங்கும் தனியார் மருத்துவக்கல்லூரியின் 100 இடங்களை, தேசிய மருத்துவ ஆணையம் திரும்ப பெற்றது. இந்த கல்லூரியில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேர்ந்த 5 மாணவர்களுக்கு வேறு கல்லூரிகளில் ‘சீட்’ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான 2024–-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. முதல்கட்டமாக, அரசு ஒதுக்கீடுக்கான பொதுப்பிரிவு தரவரிசை பட்டியலில் ஒன்று […]