செய்திகள்

கனமழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 101.05 அடியாக உயர்வு

மேட்டூர், அக். 25– கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியிலிருந்து 101.05 அடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. வினாடிக்கு 28 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 100 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. 101.05 அடியாக உயர்வு அணையின் நீர் இருப்பு தற்போது 66.20 […]

செய்திகள்

தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை, அக். 22– வளிமண்டல மேலடுக்கு சுயற்சியால் தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மதுரை, விருதுநகர், சிவகங்கை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை சென்னை ஆய்வு […]

செய்திகள்

தொடர் கனமழையால் வெள்ளத்தில் கேரளா; 27 பேர் பலி

திருவனந்தபுரம், அக்.18– கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. கேரளாவில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்றதால் […]

செய்திகள்

சீனாவை துவம்சம் செய்யும் கனமழை: சீன பெருஞ்சுவரின் ஒரு பகுதி சேதம்

பெய்ஜிங், அக். 12– சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்து பலத்த மழையால் சிட்டியா ஜுவாங் என்ற நகரமே வெள்ளத்தில் மிதக்கின்றது. அதேபோல், ஷான்ஸி மாகாணத்தில் உள்ள டாலி நகரத்தை வெள்ளப்பெருக்கு சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்கள் மூழ்கி உள்ளன. பெருவெள்ளம் நெடுஞ்சாலைகளை அடித்து சென்றுவிட்டதால், டாலி கவுண்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் இதர பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. சீன […]

செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, அக்.11 சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:– வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய திருநெல்வேலி பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி […]

செய்திகள்

7 மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, அக். 2– தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கரூர், திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று மிக அதிக கனமழை பெய்ய […]

செய்திகள்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை,செப். 19– தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, […]

செய்திகள்

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை, ஆக.29– நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் 30 ந்தேதி வரை இடியுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழை பாதிப்பை எதிர்கொள்ள அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக நீலகிரி, கோவை ஆகிய […]

செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஆக. 26– தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– வெப்பச்சலனம்‌ காரணமாக 26–ந்தேதி (இன்று) தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்‌சி, கடலூர்‌, திண்டுக்கல்‌, நீலகிரி, […]

செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஆக. 23– தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 23) கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரியில் இடி மின்னலுடன் […]