செய்திகள் முழு தகவல்

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க தி.மு.க. முயற்சி: எடப்பாடி கடும் கண்டனம்

சென்னை, டிச.5: நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சிக்கும் தி.மு.க. அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகாட்டுவார்கள் என எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலம் முதல் ஏழை , எளிய மக்களுக்கும்; முதியோர் உதவித் தொகை பெறுபவர்களுக்கும், விலையில்லா வேட்டி, சேலை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அண்ணா தி.மு.க. ஆட்சிக் காலங்களில் தரமான […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை, நவ. 29: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். வருகிற டிசம்பர் 1ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்தும், 2 மாதங்களுக்கு ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்தும் தமிழ்நாட்டில் அவரவர் தொகுதியில் எஸ்ஐஆர் மற்றும் இதர பணிகள் குறித்தும் […]

Loading

செய்திகள்

சிகிச்சைக்கான செலவு தொகையை வழங்க மறுத்த காப்பீட்டு நிறுவனம்: நுகர்வோர் கோர்ட் கண்டனம்

சென்னை, நவ.23: ‘விதிகளுக்கு உட்பட்டு சிகிச்சை பெற்ற போதிலும் சிகிச்சைக்கான செலவு தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க மறுப்பது ஏற்புடையது அல்ல’ என கர்ப்பிணி தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு கூறி உள்ளது. சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த இனியா என்பவர் சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த ஆண்டு மே மாதம் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் ரூ.15 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு எடுத்தேன். இந்த மருத்துவ காப்பீட்டில் அனைத்து […]

Loading

செய்திகள்

‘பஹல்காம்’ தாக்குதலுக்கு ஷாங்காய் அமைப்பு நாடுகள் கண்டனம்

பீஜிங், செப்.1– ”பயங்கரவாதத்திற்கு எதிராக இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறோம்” என மாநாட்டிற்கு பிறகு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்களாகவுள்ள 10 நாடுகளின் தலைவர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் ஒருவர். அவரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் குழு […]

Loading

செய்திகள்

130-–வது அரசியல் சட்டத் திருத்தம்: சீர்திருத்தம் அல்ல, ஒரு கருப்பு நாள் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை, ஆக.21- 130-வது அரசியல் சட்டத்திருத்தம் சீர்திருத்தம் அல்ல, அது ஒரு கருப்பு நாள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- 130-வது அரசியல் சட்டத் திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல, இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கொடுஞ்சட்டம். 30 நாள் கைது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை எந்த விசாரணையும், நீதிமன்றத் தண்டிப்பும் இல்லாமலேயே பதவிநீக்கம் செய்யலாம். பா.ஜனதா வைத்ததுதான் சட்டம். வாக்குகளைத் திருடு, எதிராளிகளின் […]

Loading

செய்திகள்

‘பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படமாட்டோம்’ என எச்சரிக்கை’

அ.தி.மு.க. நிர்வாகிகள் கைது : எடப்பாடி கடும் கண்டனம் சென்னை, மே 5– தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம் நடத்த முயன்ற அரக்கோணம் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ. சு.ரவி, முன்னாள் எம்.பி. கோ.அரி உள்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அண்ணா தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படமாட்டோம் என்று அவர் எச்சரித்துள்ளார். அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ள எம்ஆர்எப் தொழிற்சாலையில் கடந்த சில நாள்களாக தற்காலிக தொழிலாளர்கள் […]

Loading

செய்திகள்

சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்:

ஐகோர்ட் மதுரை கிளை கண்டனம் மதுரை, ஏப். 29– திருநெல்வேலியில் வங்கி ஒன்றில் போலியான நபர்களுக்கு வங்கிக் கடன் அளித்து ரூ.2 கோடி ஏமாற்றிய வழக்கை, சிபிஐ முறையாக விசாரணை நடத்தவில்லை என்று சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. பாளையங்கோட்டையில் உள்ள வங்கியில் போலியான ஆவணங்களை அளித்து கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் வங்கிக்கு ரூ.2 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வங்கியின் மேலாளர் உள்பட 13 பேர் மீது […]

Loading

செய்திகள்

பஹல்காம் தாக்குதலுக்கு டிரம்ப் மீண்டும் கண்டனம்

பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு உறுதுணை: அமெரிக்கா அறிவிப்பு வாஷிங்டன், ஏப். 26– காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். காஷ்மீர் தாகுதல் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், “தாக்​குதலை நடத்​திய தீவிர​வா​தி​கள், சதித் திட்​டம் தீட்​டிய​வர்​கள் […]

Loading

செய்திகள்

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் பலி :

தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் ; ரூ. 10 லட்சம் நிவாரண உதவிக்கு அறிவுறுத்தல் சென்னை, ஏப் 21– திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது. இதற்குக் காரணம் தி.மு.க. அரசு என்று குற்றஞ்சாட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

Loading