செய்திகள்

தனியார் பள்ளிகள் 2 கட்டங்களாக கட்டணம் வசூலிக்க பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை, ஜூலை.8- தனியார் பள்ளிகள் 2 கட்டங்களாக 75% கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பல பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்த வலியுறுத்துவதாக பல்வேறு புகார்கள் கல்வித்துறைக்கு வந்தவண்ணம் இருக்கின்றன. இதையடுத்து தனியார் பள்ளிகள் 75 சதவீத கல்விக் கட்டணத்தை வசூலிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு […]

செய்திகள்

கொரோனா பரிசோதனைக் கட்டணம் குறைப்பு: தமிழக அரசு அதிரடி

சென்னை, மே 20– தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இதுதொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ளார். அதில் தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கு ரூ. 1,200–லிருந்து ரூ. 900 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதுவே முதல்வர் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ. 800லிருந்து ரூ. 550 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், குழுவாக சென்று கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு ரூ. 600லிருந்து ரூ. 400 ஆக குறைக்கப்படுகிறது. வீட்டிற்குச் சென்று […]