செய்திகள்

பழவேற்காடு மீனவர்கள் 29ம் தேதி கடலுக்கு செல்ல தடை

சென்னை, ஜன. 25– ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட உள்ளதால் வரும் 29ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2–-ம் தலைமுறைக்கான என்.வி.எஸ்.02 என்ற வழிசெலுத்தல் செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகளாகும். இதனை விண்ணில் ஏவுவதற்காக ஜி.எஸ்.எல்.வி- எப்-15 ராக்கெட்டை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள […]

Loading

செய்திகள்

தூய்மையான காற்றின் அவசியத்தை வலியுறுத்தி புதுவையில் கடலுக்கு அடியில் திருமணம் செய்த காதல் ஜோடி

புதுவை, ஜன. 23– தூய்மையான காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், புதுவையில் ஆழ்கடலில் திருமணம் செய்து காதல் ஜோடி விழிப்புணர்பு ஏற்படுத்தி உள்ளனர். சென்னை மற்றும் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஆழ்கடல் பயிற்சி நிறுவனம் நடத்தி வருபவர் அரவிந்த் தருண்ஸ்ரீ. இவரது மாணவி தீபிகா என்பவர் அந்நிறுவனத்தில் ஆழ்கடல் பயிற்சியாளராக உள்ளார். தீபிகா சுத்தமான காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பாரா க்ளேடிங் செய்து, தனது காதலர் ஜான் டி பிரிட்டோவுக்கு தனது காதலை வெளிப்படுத்திய […]

Loading

செய்திகள்

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை : நிதிக்குழு நேரில் ஆய்வு

செங்கல்பட்டு, நவ. 19– செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் தினசரி 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் 16வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். அப்போது ஆலையில் இருந்து நாளொன்றுக்கு எவ்வளவு குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது, ஆலையின் செயல்பாடுகள், ஆலையின் விரிவாக்க பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என அதிகாரிகளிடம் நிதிக்குழுவினர் கேட்டறிந்தனர். இதனையடுத்து சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்லும் அவர்கள், ராமேசுவரத்துக்கு கார் மூலம் செல்கின்றனர். அங்கு இரவு ராமநாதசுவாமி […]

Loading

செய்திகள்

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை

சென்னை, செப். 3– கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று முதல் 2 நாட்கள் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக, ஆண்டுதோறும் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மற்றும் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு போலீஸாரும் இணைந்து ‘சாகர் கவாச எனப்படும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை 4 மற்றும் 5-ம் தேதி என இரண்டு நாட்களாக நடைபெற […]

Loading

செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 60 அடி தூரத்துக்கு உள்வாங்கிய கடல்

ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் பக்தர்கள் பீதி திருச்செந்தூர், செப். 3– திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே, 60 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியதால், பக்தர்கள் பீதி அடைந்தனர். தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு வருகை தரும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு முருகனை தரிசனம் செய்கின்றனர். 60 அடி உள்வாங்கிய கடல் நேற்று திருச்செந்தூரில் […]

Loading

செய்திகள்

2040ம் ஆண்டு சென்னை மாநகரின் 7 சதவிகித நிலப்பரப்பு கடல் நீரில் மூழ்கும் அபாயம்

அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு மையம் தகவல் புதுடெல்லி, ஆக. 2– 2040 ஆம் ஆண்டுவாக்கில் கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக சென்னை மாநகரின் 7 சதவிகித நிலப்பரப்பு கடல் நீரில் அமிழ்ந்துவிடும் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோர நகரங்களுக்கான கடல் மட்ட உயர்வு மற்றும் கடல்நீர் புகுவது பற்றிய வரைபட அறிக்கையை நேற்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்விற்காக இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையிலிருந்து 15 நகரங்கள் […]

Loading