கடலூர், ஏப்.18- கடலூரில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், ஒரு சிறந்த விடியலின் மாற்றங்களை நோக்கி பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை முன்னேற்றும் வகையில் […]