செய்திகள்

பழவேற்காட்டு கடற்கரையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

பொன்னேரி ஜன-13– திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடற்கரையில் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் விழா நாட்களில் கடற்கரையில் அதிகமாக கூடுகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கடலில் குளிக்கும் போது அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்து வருகின்றனர். இந்த ஆண்டு புத்தாண்டு தினத்திலும் இரண்டு பேர் இறந்த நிலையில் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் தவறி விழுந்து இறப்பதை தடுக்கும் நோக்கில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் […]

Loading

செய்திகள்

நீலக்கொடி கடற்கரை திட்டத்திற்கு எதிரப்பு

மெரினா கடற்கரை பகுதியில் மீனவர்கள் மறியல் போராட்டம் சென்னை, டிச. 25– நீலக்கொடி கடற்கரை திட்டத்திற்கு எதிரப்பு தெரிவித்து மெரினா லூப் சாலையில் பொதுமக்கள், மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டென்மாா்க் நாட்டின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்து அதற்கு நீலக்கொடி கடற்கரை தகுதியை வழங்கி வருகிறது. இந்தச் சான்றிதழானது, தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் நிலைமை உள்ளிட்ட சர்வதேச தரங்களைப் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். அந்த வகையில், […]

Loading

செய்திகள்

கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணி: 28 மின்சார ரெயில்கள் ரத்து

சென்னை, நவ.22- சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று முதல் இருமார்க்கமாகவும் 28 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. சென்னை ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விடுமுறை நாட்களில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இயக்கப்பட்டு வரும் […]

Loading

செய்திகள்

தாம்பரம்–கடற்கரை ரெயில்கள் ரத்தால் பொதுமக்கள் அவதி

தாம்பரம் – கடற்கரை இடையே ரெயில்கள் ரத்து: மக்கள் அவதி சென்னை, நவ. 17– தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே […]

Loading

செய்திகள்

பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணி

சென்னை, அக்.28 துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:– சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சிரமம் ஏதுமின்றி கடலை ரசிக்கவேண்டும். கடல் அலையில் தங்களுடைய கால்களை நனைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதையை உருவாக்கித் தந்தார். சென்ற 2022–ம் ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான 225 மீட்டர் […]

Loading

செய்திகள்

மெரினாவில் கூட்ட நெரிசலில் 100 பேர் மயக்கம்

சென்னை, அக். 6– மெரினாவில் கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகசத்தை பார்க்க 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. விமானங்கள் சீறிப்பாய்ந்த போது பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயாராக இருந்த […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி

இஸ்லாமாபாத், ஆக. 30– வடக்கு பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் உள்ள மைதான் பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு சரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள், ஒரு ஆண், ஒன்பது குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கிய […]

Loading

செய்திகள்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பெண்களின் “புடவை மாரத்தான்” போட்டி

பாரம்பரியம், நவீனத்துவம் இணைந்த புதிய முயற்சி சென்னை, ஆக. 13– சென்னை பெசன்ட் நகரில் பாரம்பரியமும் நவீனத்துவமும் இணைந்த, அனைத்து தரப்புப் பெண்களும் கலந்து கொண்ட, புடவை மாரத்தான் போட்டி உலகிலேயே முதன்முறையாக நடைபெற்றது. பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று நடைபெற்ற ‘புடவை அணிந்த பெண்களின் மாரத்தான்’ போட்டி நடைபெற்றது. பெண்கள் தங்கள் பாரம்பரியமான புடவைகளை அணிந்து மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். பொதுவாக வீட்டு வேலைகளுக்கும், கோயில் […]

Loading

செய்திகள்

மரக்காணம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அக்காள் – தங்கை உடல்

மரக்காணம், ஜூலை 12– மரக்காணம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அக்காள் – தங்கை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்காணம் அருகே கூனி மேடு மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த வேலு (வயது 33). இவர் தற்பொழுது புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதில் ஆனந்த வேலுக்கும் அவரது மனைவி கௌசல்யாவிற்கும் கடந்த வாரம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்த வேலு தனது மனைவியுடன் […]

Loading