பல்லாவரம், நவ. 6– தாம்பரம் தனியார் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் 4 மாணவர்களை கைது செய்தனர். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களில் பலர் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து இன்று காலை முதல், தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட […]