சென்னை, ஜன. 5– அறப்போராட்டம் நடத்த அனுமதி மறுப்பதா? என தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அண்ணா வழியில் ஆட்சித் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, அவருடைய கருத்துகளுக்கு முரணான வழியில், மக்களாட்சிக்கு புறம்பாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் அறப் போரட்டங்களை நடத்தி […]